அடி உதை.. போலீஸ்.. கணவர் கொடுமை.. விவாகரத்து.. நடிகருடன் காதல்.. தீபிகா பட்ட கஷ்டங்கள்..!

அடி உதை.. போலீஸ்.. கணவர் கொடுமை.. விவாகரத்து.. நடிகருடன் காதல்.. தீபிகா பட்ட கஷ்டங்கள்..!

இந்தியில் சீரியல் நடிகைகளில் மிக பிரபலமானவராக இருப்பவர் தீபிகா கக்கர். இவர் இந்தியில் இருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்ட மூன்று முடிச்சு, சின்னப்பூவே மெல்லப்பேசு போன்ற சீரியல்களில் நடித்து, தமிழக சீிரியல் ரசிகர்களிடமும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றவர்.

சசுரல் சிமர் கா, கஹான் ஹம், கஹான் தும் படங்களில் நடித்த வகையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர். கடந்த 2018ம் ஆண்டில் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 12ல் பங்கேற்றார். அதில் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றார்.

கடந்த 1986ம் ஆண்டில் புனேவில் பிறந்த தீபிகா கக்கருக்கு 36 வயதாகிறது. மும்பையில் பட்டப்படிப்பை முடித்த அவர், ஜெட் வேர்ஸ் விமானத்தில், 3 ஆண்டுகளாக பணிபுரிந்தார்.

உடல் நலத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக, அந்த பணியில் இருந்து விலகிய அவர், சினிமா மற்றும் சீரியலில் ஆர்வம் காட்ட துவங்கினார்.

இதன்பிறகு 2011ம் ஆண்டில் ரவுனக் சாம்சன் என்பவரை, தீபிகா காக்கர் திருமணம் செய்துக்கொண்டார். கடந்த 2015ம் ஆண்டில் அவரை விட்டு, தீபிகா காக்கர் பிரிந்துவிட்டார்.

அவர்களது திருமண வாழ்க்கை சில ஆண்டுகளில் முறிந்துப்போக முக்கிய காரணம், அவரது கணவர் ரவுன் சாம்சன், தீபிகா காக்கரை அடித்து துன்புறுத்தினார்.

அவரது குடும்பத்தினரும் பல்வேறு கொடுமைகளை செய்தனர். கணவர் மற்றும் கணவரின் குடும்பத்தினர் செய்த கொடுமைகளால் மனம் நொந்த தீபிகா காக்கர், போலீஸ் வழக்கு என சென்று கடைசியாக அவரை விட்டு பிரிந்தார்.

அதன்பிறகு சீரியல் நடிகர் சோயிப் இப்ராகிம் என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். தன் 2வது கணவருக்காக, இஸ்லாமிய மதத்துக்கு மாறிய தீபிகா கக்கர், தனது பெயரை ஃபைசா என மாற்றிக்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டில் இந்த ஜோடிக்கு மகன் பிறந்தார்.

சமீபத்தில் தனது 2வது திருமண வாழ்க்கை குறித்து பேசிய தீபிகா கக்கர், எனது முதல் திருமண வாழ்க்கை மிக மோசமானதாக அமைந்தது. உடல் ரீதியாக மன ரீதியாக நிறைய துன்புறுத்தல்களுக்கு ஆளானேன். அந்த வாழ்க்கையில் மிகவும் போராடினேன்.

ஆனால் இப்போது நான் வாழ்ந்து வரும் 2வது திருமண வாழ்க்கையில் பலமடங்கு சந்தோஷத்தை, அமைதியை, நிம்மதியை அடைந்து வருகிறேன். அப்போது நான் பட்ட கஷ்டங்களுக்கு பதிலாக, இன்று பலமடங்கு சந்தோஷங்களை தினமும் பெற்று வருகிறேன்.

இந்த வாழ்க்கை எனக்கு மிகப்பெரிய பொக்கிஷமாக மாறியிருக்கிறது என்று சந்தோஷத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

முதல் திருமண வாழ்க்கையில் அடி உதை, போலீஸ்.. கணவர் கொடுமை.. விவாகரத்து என பல துன்பங்களை கடந்து நடிகர் சோயிப் இப்ராகிமுடன் காதல் என சந்தோஷமான வாழ்க்கைக்கு மாறி இருக்கிறார்.

எனினும் முதல் திருமண வாழ்க்கையில் தீபிகா பட்ட கஷ்டங்கள் இன்னும் அவர் மனதை விட்டு மறையவில்லை என்பதையே அவரது வார்த்தைகள் வெளிப்படுத்துகிறது.

LATEST News

Trending News