போதைப்பொருள் கடத்தல் ஜாஃபர் சாதிக் அதிரடி கைது.. சிக்கும் முன்னணி நடிகைகள்.. பெயர்களை கேட்டு அதிரும் கோடம்பாக்கம்..
திரைப்படங்களில் காட்டப்படும் போதை பொருள் கடத்தலை போல தற்போது யாரும் எதிர்பார்க்கிறாத அளவு தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய மாபியாவாக செயல்பட்ட திமுகவைச் சேர்ந்த ஜாபர் சாதிக் போதை பொருள் கடத்தல் வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
இந்த போதைப் பொருள் கடத்தல் சம்பவமானது தமிழகத்தை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவும் திரை உலகின் மீது தன் பார்வையை திருப்பி உள்ளது என கூறலாம்.
உலக அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கக்கூடிய இந்த போதை பொருள் கடத்தல் பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் மூலம் நடந்துள்ளது.அத்தோடு கடந்த ஒரு வார காலமாக தமிழ்நாட்டில் பேசும் பொருளாக மாறி உள்ளது.
இதற்கு காரணம் ஜாபர் சாதிக் நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு போதைப்பொருள் கடத்துவதற்கு மூளையாக செயல்பட்டு இருக்கிறார் என்ற தகவல் தான்.
கிட்டத்தட்ட 2000 கோடி மதிப்பிலான போதை பொருட்கள் கைமாற்றப்பட்டதற்கு இவர் உறுதுணையாக இருந்ததாக மிகப்பெரிய அதிர்வலை கிளப்பி உள்ள நிலையில் இந்த குற்றத்தின் பின்னணியில் பல சினிமா நடிகைகள் மற்றும் நடிகர்களின் பெயர் அடிபட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் போதைப் பொருள் கடத்தல் பிரிவு போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டு இருக்கும் ஜாபர் சாதிக் இந்த விவகாரம் வெளியே வந்த உடனே நான் இல்லை, நீ இல்லை என நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் என பலரும் ஜாபர் சாதிக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என அவர்களாகவே மீடியாக்களில் வாக்கு மூலம் கொடுத்து வந்ததை பார்த்திருக்கலாம்.
ஆனால் உண்மையில் பல்வேறு முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் ஜாபர் சாதிக்குடன் தொடர்பில் இருந்திருக்கிறார்கள். அதற்கு சான்றாக அவருடைய வங்கி கணக்கு மற்றும் தொலைபேசி ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களை வழக்கில் இணைத்து விசாரிக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு வருகிறது.
குறிப்பாக போதை தடுப்பு காவல்துறை ஜாபர் சாதிக்கின் வீட்டில் பொருத்தப்பட்டு இருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து பார்த்தபோது பல நடிகர் மற்றும் நடிகைகள் ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு கையை வீசிக்கொண்டு வருவதும் திரும்பிச் செல்லும் போது பெட்டிகளில் எதையோ எடுத்துச் செல்வதும் போன்ற காட்சிகள் பதிவாகி இருக்கின்றது.
இதன் அடிப்படையில் அவர்கள் என்ன எடுத்து செல்கிறார்கள். எங்கு எடுத்து செல்கிறார்கள் உள்ளிட்ட விபரங்களை போதை தடுப்பு பிரிவு காவல் துறையினர் விசாரித்து வருகிறார்கள்.
அதிரும் கோடம்பாக்கம்..
இந்த விசாரணை சூடு பிடித்து உள்ள நிலையில் அரசல், புரசலாக பல முன்னணி நடிகைகள் மற்றும் நடிகர்கள் இந்த பட்டியலில் சிக்குவார்கள் என்று ஒரு விவரம் கோடம்பாக்க வட்டாரத்தில் பரவி வருகிறது. மேலும் இந்த பட்டியலில் உள்ள பெயர்கள் எல்லாம் தெரிந்து கொண்ட கோடம்பாக்கம் அதிரும் படி உள்ளது என கூறலாம்.
எனவே பல நடிகர் மற்றும் நடிகைகள் சிக்குவார்கள் என்ற போர்வையில் தொடர்ந்து இது குறித்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உண்மை நிலை என்ன என்று தெரிந்து கொள்ள நீங்கள் இணைந்திருங்கள் இது உங்கள் தமிழகம் டாட் காம்.