படப்பிடிப்பில் பிச்சைக்காரனுடன் படுக்க வைத்த இயக்குனர்... இவ்வளவு கொடுமையை அனுபவித்த அஞ்சலி..
ஜீவா நடிப்பில் இயக்குனர் ராம் இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை அஞ்சலி. இவர் தமிழ் படங்கள் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் அனைத்து மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
அஞ்சலி கெரியரில் முக்கியமான படங்களில் ஒன்று அங்காடி தெரு. இப்படத்தில் இவர் வெளிப்படுத்திய நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படத்தின் கதை அஞ்சலிக்கு சரியாக இருக்கும் என்பதால் வசந்த பாலன் அவரிடம் கூறியுள்ளார்.
கதையை கேட்ட அஞ்சலி உடனே ஓகே சொல்லிவிட்டாராம். இப்படத்தின் ஒரு குறிப்பிட்ட காட்சியில் அஞ்சலி ரோட்டில் பிச்சைக்காரருடன் சாலையில் படுப்பது போன்ற காட்சி இடம் பெற்று இருக்கும்.
இந்த காட்சியை படமாக்கும் போது அஞ்சலிக்கு பிச்சைக்காரர்களுடன் சாலையில் படுக்க பிடிக்கவில்லையாம். இதனால் படு கோபத்தில் இருந்தாராம் அஞ்சலி. ஆனால் படம் வெளியாகி அந்த காட்சியை பார்த்த பிறகு அவரின் மனம் மாறிவிட்டதாம்.