விரைவில் தொகுப்பாளராக களமிறங்கும் சிம்பு?

விரைவில் தொகுப்பாளராக களமிறங்கும் சிம்பு?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் சிம்பு, விரைவில் தொகுப்பாளராக களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது.

நடிகர் சிம்பு, உடல் எடையை குறைத்த பின்னர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் மாநாடு, பத்து தல, மஹா, நதிகளிலே நீராடும் சூரியன் போன்ற படங்கள் உள்ளன.  

இந்நிலையில், நடிகர் சிம்பு விரைவில் தொகுப்பாளராக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சர்வதேச அளவில் பிரபலமான 'சர்வைவர்' நிகழ்ச்சியின் தமிழ் பதிப்பை சிம்பு தொகுத்து வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியின் விதிப்படி, ஆளில்லாத தனித்தீவில் போட்டியாளர்களை தங்க வைத்து, அவர்களுக்கு விதவிதமான டாஸ்க்குகள் கொடுக்கப்படும். அவை அனைத்தையும் வெற்றிகரமாக கடந்து இறுதிவரை தாக்குப்பிடிக்கும் போட்டியாளரே வெற்றியாளராக அறிவிக்கப்படுவார். இதில் வெற்றி பெறுபவருக்கு பெரும் பரிசுத் தொகையும் வழங்கப்படும். 

ஏற்கனவே நடிகர் கமல் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியையும், நடிகர் விஜய் சேதுபதி ‘மாஸ்டர் செப்’ நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES