மாஸ் நடிகரை துவம்சம் பண்ண.. காமெடி நடிகருக்கு கொட்டுது கோடி.. என்ன இப்படி இறங்கிட்டாங்க.
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய காமெடி ஜாம்பவானாக தன்னுடைய இடத்தை ஆழமாக பிடித்தவர் அந்த பிரபல காமெடி நடிகர்.
அவரது இடத்தையும் இன்றளவும் யாராலும் நிரப்பவே முடியாது என்ற அளவுக்கு தனது காமெடி திறமையால் மக்களை கட்டிப்போட்டு வைத்திருந்தார்.
ஆனால், அப்படிப்பட்ட நடிகரையே காணாமல் செய்துவிட்டார்கள் நம் மக்கள். ஆம் ,அதற்கெல்லாம் காரணம் அந்த நடிகரின் வாய் கொழுப்பு தான் என்கிறார்கள்.
அவர் சென்ற இடமெல்லாம் செல்லும் மேடையெல்லாம் மற்ற நடிகர்களை பற்றி குறை கூறியும், அவர்களை இழிவாக பேசியும், காமெடி என்ற பெயரில் அவர்களை கொச்சைப்படுத்தியும் பேசி வந்தது தான் அவருக்கு ஆப்பு வைத்து விட்டார்கள்.
இதனால் அவர் சினிமா பக்கமே வரக்கூடாது என்று புறம் தள்ளிவிட்டார்கள். அதற்கான காரணத்தையும் சொன்னார்கள். அது என்னவென்றால் ஒழுங்காக படப்பிடிப்புகளுக்கு வருவதில்லை, இழுத்தடிப்பது, பணத்தை வாங்கிக் கொண்டு வாங்கவே இல்லை என ஏமாற்றுவது இப்படி எல்லாம் அடாவடி செய்துள்ளார்.
அப்படித்தான் அந்த புயல் காமெடி நடிகர் மிகப்பெரிய அரசியல் ஜாம்பவானாகவும் மிகப்பெரிய நடிகராகவும் நல்ல மனிதராகவும் இருந்த ஒருவரையே தன்னுடைய பேச்சாள் சாய்த்து விட்டார்.
மிகப்பெரிய ஜாம்பவனாக அரசியலில் கலக்கிக் கொண்டிருந்த சமயத்தில் அதை காமெடி நடிகர் அந்த நடிகரைப் பற்றி புறம் பேசியும், இழிவுபடுத்தியும், காமெடி என்ற பெயரில் தன் வாயில் வந்தது எல்லாம் பேசி அந்த நடிகரை அடையாளமே இல்லாமல் அரசியலில் அட்ரஸே இல்லாமல் செய்து விட்டார்.
சமீபத்தில் தான் அந்த சிங்கம் சரிந்தது என்பது நம் அனைவருக்கும் தெரியும் இப்போது தனது அடுத்த கட்ட வேலையை ஆரம்பித்துள்ளார் இந்த காமெடி நடிகர்.
அட ஆமாங்க, சினிமாவில் மாஸ் நடிகராக இருந்த அந்த பிரபல ஹீரோ தற்போது அரசியல் கட்சி ஆரம்பித்து தீவிரமாக இறங்கியுள்ளார். அவரையும் எப்படியாவது செய்துவிடவேண்டும் என பெரிய புள்ளிகள் சில இந்த காமெடி நடிகருக்கு கொம்பு சீவி விட்டுள்ளதாம்.
அதாவது அந்த காமெடி நடிகருக்கு காசு கொடுத்து மாஸ் ஹீரோவின் அரசியல் என்ட்ரியை தடுக்க பார்க்கிறதாம் ஆளுங்கட்சி. அதற்காக ஒரு மிகப்பெரிய கூட்டமே பின்னால் இருந்து வேலை செய்து வருகிறது.
அதற்காக அந்த காமெடி நடிகருக்கு அட்வான்ஸ் தொகையாக பல கோடி கொட்டிக் கொடுக்கப்பட்டு அவரை எப்படியாவது அழித்து விடுங்கள் என ஆளும் கட்சியை சேர்ந்த சிலர் அவருக்கு துணையாக இருப்பதாக பேச்சுக்கள் எழுந்து வருகிறது.
எனவே இதனால் அரசியலில் என்ட்ரி கொடுத்துள்ள அந்த மாஸ் நடிகரும் அவரது கூட்டாளிகளும் அச்சத்தில் இருக்கிறார்களாம்.
அவர் என்ன செய்வாரோ? நமது அரசியல் பயணம் எப்படி இருக்குமோ? சதிகளை எப்படி எதிர்கொள்ளவது என்ற ஒரு பயத்தில் இருக்கிறார்களாம்.
அதுமட்டுமில்லாமல் அந்த மாஸ் நடிகரின் கட்சியில் கொஞ்சம் கொஞ்சமாக அந்த காமெடி நடிகர் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதும் அந்த அரசியல் கட்சியை சார்ந்த நிர்வாகிகளுக்கு சுத்தமாக பிடிக்கவே இல்லையாம்.
அத்துடன் அரசியலில் ஆர்வம் காட்டி வரும் மாஸ் நடிகருக்கு எதிராக குடைச்சல் கொடுக்க காமெடி நடிகரை அந்த ஆளுங் கட்சி கொம்பு சீவி வருவதாக பேச்சுக்கள் புகையத் தொடங்கி உள்ளன.
இப்படிப்பட்ட வேலைகளை பார்க்க அந்த காமெடி நடிகருக்கு பல கோடி சம்பளமும், அட்வான்ஸும் கொடுக்கப்பட்டு இருப்பதாக சினிமா வட்டாரத்தில் ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.
தொடர்ந்து இப்படி அடுத்த புராஜெக்ட் அந்த காமெடி நடிகருக்கு வழங்கப்பட்டு வருவது சினிமா வட்டாரத்தில் திடுக்கிட வைக்கிறது.