“உள்ள வராத அப்டியே திரும்பி போ..” வீடு தேடி சென்ற விஜய்யை துரத்திய உயிர் நண்பன்.. என்ன நடந்தது..?

“உள்ள வராத அப்டியே திரும்பி போ..” வீடு தேடி சென்ற விஜய்யை துரத்திய உயிர் நண்பன்.. என்ன நடந்தது..?

நடிகர் விஜய் தற்பொழுது சினிமாவை தாண்டி பொது வாழ்க்கையில் ஈடுபடுவதற்காக தனியாக அரசியல் கட்சியை தொடங்கி இருக்கிறார்.

நடிகர் விஜயின் நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது தமிழக அரசியல் வட்டாரங்கள். தமிழகம் தாண்டி ஒட்டுமொத்த இந்தியாவும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

ஏனென்றால் நடிகர் விஜய்க்கு இந்த அளவுக்கு மவுசு இருக்கிறது. தற்போது வரை விஜய்க்கு நிச்சயமாக 15 சதவீத வாக்குகள் எளிமையான கிடைக்கும் எனவும் அவருடைய அரசியல் நகர்வுகள் மற்றும் அவர் எடுக்கக்கூடிய முடிவுகள் தான் அவருடைய வெற்றி தோல்வியை தீர்மானிக்க இருக்கிறது என்றும் சர்வே முடிவுகள் கூறுகின்றன.

நடிகர் விஜயின் அரசியல் நடவடிக்கைகள் எப்படி இருக்க போகிறது என்பதை பார்க்க அவருடைய ரசிகர்களும் தமிழக மக்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இது குறித்து நடிகர் விஜய்க்கு நாள்தோறும் கேள்விகள் எழுந்து வந்தன.

இந்நிலையில், அவருடைய கட்சி சார்பில் வெளியான அறிக்கையில் நாடாளுமன்ற தேர்தல் முடிந்த பிறகு நடிகர் விஜய் அவர்கள் மக்களை சந்திப்பார் முழு வீச்சில் அரசியல் பணிகளை மேற்கொள்வார் என்று தகவல் வெளியிடப்படுகின்றன.

இப்படி அரசியலில் அடியெடுத்து வைத்திருக்கும் நடிகர் விஜய் சினிமாவிலும் ஒரு கலக்கு கலக்கியவர். என்னதான் சினிமாவில் முடி சூடா மன்னனாக இருந்தாலும் கூட தன்னுடைய நண்பர்களுடன் நேரம் செலவழிப்பதை நடிகர் விஜய் மறப்பது கிடையாது.

விஜயின் நண்பர்கள் யார் யார் என்று பொதுவான சினிமா ரசிகர்களுக்கு அனைவருக்கும் தெரியும். அதில் முக்கியமான ஒருவர் சீரியல் நடிகர் சஞ்சீவ்.

நடிகர் சஞ்சீவியின் பேட்டி என்றாலே நடிகர் விஜய் கொடுத்த கேள்வி இல்லாமல் இருக்கவே இருக்காது. மேலும், பேட்டிகளில் அவர் என்ன பேசினாலும்.. விஜய் குறித்த பேச்சு தான் பிரதானமாக காட்டப்படும்.

இதனால் ரசிகர்கள் பலரும் விஜய் பற்றி பேசாமல் உன்னால் பேட்டி கொடுக்கவே முடியாதா..? என்று சஞ்சீவை கடுமையாக விமர்சிக்கும் அளவுக்கு நடிகர் சஞ்சீவியின் நடவடிக்கைகள் இருக்கின்றன.

மட்டுமில்லாமல் அவருடைய நடிப்பு.. அவருடைய தோரணை.. அனைத்தும் நடிகர் விஜயை காப்பியடிப்பது போல இருக்கின்றன என்றெல்லாம் சஞ்சீவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இது ஒரு பக்கம் இருக்க சஞ்சீவியின் வீடு தேடிச்சென்ற விஜய் நடிகர் சஞ்சீவ் வீட்டுக்குள்ளே விடாமல் வாசலோடு திருப்பி அனுப்பிய சம்பவம் பற்றி சமீபத்தில் பேட்டி ஒன்றிய பேசியிருக்கிறார்.

கொரோனா காலகட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார் நடிகர் சஞ்சீவ். இதனால் தன்னுடைய மனைவி குழந்தைகளை பாதுகாப்பாக அவர்களுடைய வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

வீட்டில் தனியாக சமைத்து சாப்பிட்டு கொண்டு இருக்கிறார் சஞ்சீவ். இந்த விஷயத்தை தொலைபேசியில் பேசிய நடிகர் விஜய் இடமும் தெரிவித்திருக்கிறார் நடிகர் சஞ்சீவ்.

அவரைப்போல நடிகர் விஜய் அவருக்காக ஒருவேளை உணவை சமைத்து எடுத்துக் கொண்டு அவருடைய வீட்டிற்கு அவரைப் பார்க்க வந்திருக்கிறார்.

இதனை அறிந்த சஞ்சீவ் தயவு செய்து உள்ளே வராதே சாப்பாட்டை கேட்டின் முன்பு வைத்துவிட்டு போ.. நான் எடுத்துக்கிறேன்.. என்று வாசலோடு திருப்பி அனுப்பி இருக்கிறார். இந்த சம்பவத்தை சமீபத்தில் கண்ணீர் மல்க இவருடைய இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

LATEST News

Trending News

HOT GALLERIES