“ஒரு மணி நேரத்துக்கு 25 லட்சம்..” மீண்டும் சிக்கலில் சின்ன நம்பர் நடிகை..! கூவத்தூர் கூத்து..

“ஒரு மணி நேரத்துக்கு 25 லட்சம்..” மீண்டும் சிக்கலில் சின்ன நம்பர் நடிகை..! கூவத்தூர் கூத்து..

பிரபல அரசியல் கட்சி ஒன்றில் வெடித்துள்ள உட்கட்சி பூசல் குறிப்பிட்ட இரண்டு அரசியல் தலைகளை தாண்டி இன்னும் சில திரைப்பிரபலங்களின் தலைகளையும் உருட்டி இருக்கிறது.

இந்த விவகாரம் இணைய பக்கங்களில் நாறி நசநசத்துக் கொண்டிருக்கிறது. நான்கு சுவருக்குள் முடிக்க வேண்டிய விஷயத்தை முடிக்க தவறியது தான் இந்த விவகாரம் இன்று காற்றில் பறக்க காரணமாகிவிட்டது என்று உச் கொட்டுகிறார்கள் விவரம் அறிந்த வட்டாரங்கள்.

இந்த கூவத்தூர் விவகாரம் நடந்து ஏழு எட்டு வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது இந்த விவகாரம் எதற்கு வெளியே புதைந்து கொண்டிருக்கிறது…? மாங்கனி நகரில் இரண்டு பெரிய அரசியல் தலைகளுக்கு இடையே ஏற்பட்ட பிணக்கு ஒரு கட்டத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது. ஆனால், அதனை சரியாக விசாரிக்காமல் ஒரு அரசியல் தலைக்கு எதிராக தலைமை நடந்து கொண்டது தான் இந்த பிரச்சனைக்கு காரணமாக அமைந்துவிட்டது என்று விசும்புகிறார்கள் விசுவாசிகள்.

தன்னிடம் பணத்தை ஏமாற்றி விட்டார். அரசு வேலை வாங்கி தருவதாக கூறி சில லட்சங்களை ஏமாற்றி இருக்கிறார் என்றெல்லாம் புகார்களை அடுக்கி கொண்டிருந்த அந்த அரசியல் தலை.. ஒரு கட்டத்தில் ஒரு படி மேலே சென்று கூவத்தூர் விவகாரங்களை எல்லாம் கிளற ஆரம்பித்து விட்டார்.

அதில் அவர் கூறியதாவது, அந்த கடவுள் பெயர் கொண்ட மாங்கனி நகரத்தின் அரசியல் தலை கூவத்தூரில் இருந்த போது எனக்கு சின்ன நம்பர் நடிகை தான் வேண்டும் என்று ஒற்றைக் காலில் நின்றதாகவும்.. அவரை 25 லட்சம் ரூபாய் கொடுத்து லொடுக்கு நடிகர் அழைத்து வந்து சமாதானம் செய்ததாகவும் கூறியிருக்கிறார்.

இந்த விவகாரம் தான் தற்போது இணைய ஊடக வட்டாரத்தில் புகைச்சலை கிளப்பி இருக்கிறது. என்னப்பா இது..? உட்கட்சி பூசல் என்றாலும் ஒரு வரைமுறை வேண்டாமா..? இப்படி அடிமட்டம் வரைக்கும் இறங்கி அலசினால் என்ன ஆவது..? நேற்று வரை தாயாக.. பிள்ளையா பழகிட்டு இருந்த தலைகள்.. இன்று இப்படி பொதுவெளியில் அடித்துக் கொண்டால் கட்சியின் நிலைமை என்ன ஆவது..? என்று தலையில் அடித்துக்கொண்டு உச்கொட்டுகிறார்கள் மாங்கனி நகர விசுவாசிகள்.

இது ஒரு பக்கம் இருக்க., மறுபக்கம் சின்ன நம்பர் நடிகையை ரவுண்டு கட்டி வருகிறார்கள் இணையவாசிகள். ஒரு நடிகர் உங்களைப் பற்றி தவறாக பேசிவிட்டார் என்றதும் கத்தி கூப்பாடு போட்டீங்களே..

நடிகர் சங்கத்தில் இருந்து அவரை நீக்கும் அளவுக்கு சென்றீர்களே.. தற்பொழுது ஒரு அரசியல் தலை உங்களுடைய பெயரை டேமேஜ் செய்து இருக்கிறார்.. இதற்கு உங்களுடைய ரியாக்ஷன் என்ன..? என்று எக்ஸ் வலைதளத்தில் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES