என் மகன்.. என் ஆபாச புகைப்படத்தை கொண்டு வந்து கேட்ட ஒரு கேள்வி.. அர்ச்சனா ஓப்பன் டாக்..!

என் மகன்.. என் ஆபாச புகைப்படத்தை கொண்டு வந்து கேட்ட ஒரு கேள்வி.. அர்ச்சனா ஓப்பன் டாக்..!

சினிமாவில், சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகையாக இருப்பவர் அர்ச்சனா மாரியப்பன். வாணி ராணி, அழகி, வள்ளி, அழகு உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார்.

பெரும்பாலும் சீரியல்களில் வில்லி கேரக்டரில்தான் அர்ச்சனா மாரியப்பன் நடித்து, ரசிகர்களின் மனம் கவர்கிறார்.

போகி, முத்தின கத்திரிக்காய், வௌ்ளக்கார துரை, நாடோடிகள் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார்.

ஆனால் இவர் நடித்தது எல்லாமே சின்ன சின்ன ரோல்களாக இருப்பதால் பெரிய அளவில் அர்ச்சனா மாரியப்பன் ரசிகர்களின் மத்தியில் ரீச் ஆகவில்லை.

ஆனால் கதாநாயகியாக நடிப்பதற்கான அழகு இருந்தும் இன்னும் சைடு ரோல்களில் மட்டுமே நடிக்க அவருக்கு வாய்ப்பு கிடைத்து வருகிறது.

இதற்கிடையே ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்துவிட்டு, அந்த படத்தில் நடித்த பிறகு, படத்தின் பெயரையே மாற்றி, அதை ஒரு ஆபாச படமாக வெளியிட்டுள்ளனர்.

அதுமட்டுமின்றி அந்த படத்தின் விளம்பரத்தை தினமும் செய்தி நாளிதழ்களில் விளம்பரமாக வெளியிட்டதால், பல்வேறு பிரச்னைகளை அர்ச்சனா மாரியப்பன் சந்தித்து இருக்கிறார்.

இதுகுறித்து ஒரு நேர்காணலில் நடிகை அர்ச்சனா மாரியப்பன் கூறியதாவது, அசைவம் படத்துக்கு முதலில் நடிக்க எங்களிடம் கையெழுத்து வாங்கும்போது அந்த படத்தின் டைட்டில் மணமகன் தேவை.

ஒரு குடும்பத்துல அஞ்சு பொண்ணுங்க கஷ்டபடறாங்க அப்படீங்கற கதையில்தான் எடுக்கறதா சொன்னாங்க.

படம் எல்லாம் முடிஞ்ச பிறகு இவங்க அசைவம் அப்படீன்னு டைட்டில் மாத்தி ஏ சர்டிபிகேட் வெச்சதே எங்களுக்கு தெரியாது. அதுக்கு அப்புறம் மாத்தினது அது. அப்ப நான் யூனியன்ல மெம்பர் கிடையாது.

அப்போ தினமும் பேப்பர்ல என்னோட போட்டோ போட்டு, அந்த படத்தோட விளம்பரம் வரும். என் பையன் அப்போ ஸ்கூலில் படிச்சிட்டு இருக்கான். தினமும் அவன் ஸ்கூலில் நியூஸ் வாசிக்கணும்.

பேப்பர் எடுத்துட்டு வந்து படிக்கும் போது, அதுல இருந்த அந்த போஸ்டரை பார்த்திருக்கான். சாயந்திரம் அந்த பேப்பரை எடுத்துட்டு வந்து என்கிட்ட காட்டி, அம்மா நீங்களா இது? போட்டோ வந்திருக்கு அப்படீன்னு சொல்லி என்கிட்ட கேட்டான்.

அவ்வளவு பெரிய இஷ்யூ எல்லாம் ஆச்சு அந்த படத்தால். சங்கத்துல இதுபத்தி புகார் சொன்னாலும் கூட, நீங்கள் மெம்பர் இல்லம்மா, அதனால எதுவும் பண்ண முடியாது.

இதை நீங்க இன்னும் பெரிசு பண்ணினால், அது அவங்களுக்கு தான் பப்ளிசிடி ஆகும். பேசாம அப்படியே விட்டுடுங்க என்று சொல்லி விட்டனர், என்று கூறியிருக்கிறார்.

ஒரு நடிகையாக நான் இருந்தாலும் என்னுடைய மகன், நாளிதழில் வந்த என் ஆபாச புகைப்படத்தை கொண்டு வந்து காட்டி, இது நீங்களா அம்மா என்று கேள்வி கேட்ட அந்த மோசமான நேரத்தை என்னால் மறக்கவே முடியாது என அர்ச்சனா வருத்தப்பட்டு பேசியிருக்கிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES