முதல் ஆண் நண்பருடன் மொட்டை மாடியில் திருட்டுத்தனமா இதை பண்ணேன்.. வெக்கமின்றி கூறிய ஸ்ருதி ஹாசன்..!

முதல் ஆண் நண்பருடன் மொட்டை மாடியில் திருட்டுத்தனமா இதை பண்ணேன்.. வெக்கமின்றி கூறிய ஸ்ருதி ஹாசன்..!

நடிகை ஸ்ருதி ஹாசன் கடந்த 1986 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் மும்பையில் உள்ள புனித ஆண்ட்ரூவ் கல்லூரியில் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்த இவர் பிரபல நடிகரான கமல்ஹாசன் மற்றும் நடிகை சரிக்கா தாக்கூர் ஆகிய தம்பதிக்கு பிறந்த முதல் குழந்தையா வார்.

கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான ஹேராம் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை ஸ்ருதிஹாசன்.

இந்த படத்தில் வல்லபாய் பட்டேலின் மகள் கதாபாத்திரத்தை ஏற்றடித்திருந்தார். அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு இலக்கு என்ற ஹிந்தி படத்தில் அறிமுகமான இவர் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தில் சுபா ஸ்ரீனிவாசன் என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார்.

அதன் பிறகு 3, பூஜை, புத்தம் புது காலை, லாபம், சிங்கம் 3, புலி, வேதாளம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார். முன்னணி நடிகரின் மகள் என்ற ஒரே காரணத்திற்காக ஒரு பட வாய்ப்புகள் கிடைக்கின்றன.

இவர் நடித்த படங்கள் எதுவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறவில்லை என்று விமர்சனம் இவர் முன்பு வைக்கப்பட்டது. ஆனாலும் தன்னுடைய தந்தையின் பெயரை பயன்படுத்தி வாழ்வது எனக்கு பிடிக்காத விஷயம் தனிப்பட்ட முறையில் நான் தான் என்னுடைய செலவுகளை பார்த்துக் கொள்கிறேன்.

நான் வாழ்வதற்கு நான்தான் சம்பாதிக்க வேண்டி இருக்கிறது என்றெல்லாம் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியிருந்தார்.

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் உங்களுடைய வாழ்க்கையில் யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக சென்ற ஒரு இடம் என்றால் அது என்ன இடம்..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதில் அளித்த ஸ்ருதிஹாசன், என்னுடைய முதல் ஆண் நண்பர் வீட்டின் மொட்டை மாடி தான் நான் திருட்டுத்தனமாக சென்ற இடம்.

எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்பு இது நடந்தது. என் ஆண் நண்பரை திருட்டுத்தனமாக சந்தித்த இடம் தான் முதன் முறையாக நான் திருட்டுத்தமாக சென்ற இடம்.

அவருடைய வீட்டின் மொட்டை மாடியில் திருட்டுத்தனமாக நானும் என் நண்பரும் சந்தித்துக் கொண்டோம் என்று கூறிய அவர் எனக்கு பொசசிவ்னஸ் என்பது அறவே கிடையாது.

ஒருவேளை என்னை யாராவது அப்படி உணர வைத்தால் நாம் அவர்கள் மீது சந்தேகப்படக்கூடாது அடுத்து என்ன என்பதைத்தான் யோசிக்க வேண்டும் என்று கூறியுள்ளளார் ஸ்ருதி ஹாசன். அதாவது அவர்களை பிரேக் அப் செய்துவிட்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும் என்பதை கூறியிருக்கிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES