104 கிலோ உடல் எடையை குறைத்தது எப்படி, மன அழுத்தம்- ஓபனாக பேசிய நடிகர் கார்த்தி.
தமிழ் சினிமாவில் நடிகர் சூர்யாவின் தம்பி என்ற அடையாளத்தோடு நாயகனாக பருத்திவீரன் படத்தில் அறிமுகமாகி இப்போது தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர் தான் நடிகர் கார்த்தி.
உதவி இயக்குனராக இருந்து இப்போது சிறந்த நடிகராக உருவாகி இருக்கும் கார்த்தி நடிப்பில் அண்மையில் ஜப்பான் என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது.
கார்த்தியின் 25வது படம் வெற்றிகரமாக அமைந்துள்ளதா என்றால் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது என்று தான் கூற வேண்டும்.
இப்பட புரொமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கார்த்தி பேசும்போது, பையா படத்திற்கு பிறகு என்னையும் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்பதை உணர்ந்தேன்.
இதனால் உடல் எடையை குறைக்க அதிகம் ஓட ஆரம்பித்தேன், ஆனால் பிரச்சனை என்னவென்றால் எனக்கு அவ்வளவு எளிதில் உடல் எடை குறையாது.
அந்த சமயத்திலெல்லாம் நான் மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளாகுவேன். ஒரு நடிகனாக நான் மாற வேண்டும் என்று நினைத்த பொழுது கூட, நான் மிகவும் வலிமையான மனிதனாக மாற வேண்டும் என்று தான் நினைத்தேன்.
உணவு பழக்கங்களை மாற்றினேன், 70% நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்களோ அதை பொறுத்து தான் செயல்படுகிறது, மீதி 30 தான் உடற்பயிற்சி என பேசியுள்ளார்.