இன்று முதல் ஆரம்பமாகும் சிம்புவின் அடுத்த படம்!

இன்று முதல் ஆரம்பமாகும் சிம்புவின் அடுத்த படம்!

நடிகர் சிம்புவின் அடுத்த படத்தின் பணிகள் இன்று முதல் ஆரம்பமாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

சிம்பு நடித்து முடித்த ’மாநாடு’ திரைப்படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்றும், வரும் ஆயுத பூஜை தினத்தில் இந்த படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சிம்பு அடுத்ததாக ‘பத்து தல’ என்ற படத்திலும் ’நதிகளிலே நீராடும் சூரியன்’ என்ற படத்திலும் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது ’நதிகளிலே நீராடும் சூரியன்’ படத்தின் பணிகள் இன்று முதல் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இன்று சென்னையில் இந்த படத்தின் போட்டோசூட் நடப்பதாகவும் இதில் சிம்பு கலந்து கொண்டதாகவும் தகவல்கள் கூறுகின்றன. கெளதம் மேனன் இயக்கத்தில் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் கவிஞர் தாமரை எழுத உள்ளார்.

ஏற்கனவே கௌதம் மேனன், ஏஆர் ரஹ்மான் மற்றும் சிம்பு கூட்டணியில் உருவான ’விண்ணைத்தாண்டி வருவாயா’ என்ற திரைப்படம் மாபெரும் ஹிட்டான நிலையில் மீண்டும் இணைந்துள்ள அதே கூட்டணி மீண்டும் ஒரு ஹிட் படத்தை கொடுக்கும் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES