பிசாசு படத்தில் கவுரவ தோற்றத்தில் விஜய்சேதுபதி

பிசாசு படத்தில் கவுரவ தோற்றத்தில் விஜய்சேதுபதி

மிஷ்கின் இயக்கதில் வெளிவந்த பிசாசு படம் நல்ல வரவேற்பை பெற்றது. அவர் தற்போது பிசாசு படத்தின் 2ம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஆண்ட்ரியா தான் நாயகி. நாயகன் என்று யாரும் இல்லை. பூர்ணா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இவர்கள் தவிர விஜய் சேதுபதி கவுரவ தோற்றத்தில் நடிக்கிறார்.

இதுகுறித்து மிஷ்கின் கூறியிருப்பதாவது: பிசாசு படத்தில் பிசாசு தான் முக்கிய கேரக்டர். அதுபோல இந்த படத்திலும் பிசாசு தான் முக்கிய கேரக்டர். அதில் அன்பு, பாசம், கருணை, சின்னதாக ஒரு மெசேஜ் இருப்பது போன்று இதிலும் இருக்கும், மற்றபடி இரண்டு படங்களுக்கும் வேறெந்த தொடர்பு இல்லை. அது வேறு கதை, இது வேறு கதை.

ஆண்ட்ரியாவின் கேரியரில் இது முக்கியமான படமாக இருக்கும். அந்த அளவிற்கு மிகவும் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். நான் அவரை கஷ்டப்படுத்தியிருக்கேன் என்றும் சொல்லலாம். இது பெரியவர்களுக்கான திகில் படம்தான். படம் பயமுறுத்தத்தான் செய்யும். அப்படியான கேட்டகிரியில் உருவாகும் படம்.

படத்தில் நாயகன் இல்லை. பூர்ணாவும், சந்தோஷ் பிரதாப்பும் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். விஜய்சேதுபதி நடிக்கும் கேரக்டர் பற்றி விரிவாக சொல்ல இயலாது. வியக்கத்தக்க ஒரு கேரக்டர் என்று மட்டும் சொல்லாம். 90 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. என்றார்.

இந்த படத்தில் விஜய்சேதுபதி விஞ்ஞான முறைப்படி பேய், பிசாசுகளிடம் பேசுகிறவர். பேயோட்டும் நவீன மந்திரவாதி என்ற கேரக்டரில் நடிப்பதாகவும், இதுபோன்ற கேரக்டர்கள் ஹாலிவுட் படங்களில் அதிகம் வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES