திரையரங்கிற்குள் வெடிகளை கொளுத்திப்போட்ட ரசிகர்கள்.. அதிர்ச்சியளிக்கும் வீடியோ..
சமீபகாலமாக திரையரங்கில் ரசிகர்கள் செய்யும் அட்டகாசம் எல்லைமீறி போய்க்கொண்டு இருக்கிறார். லியோ படத்தின் டிரைலர் வெளியீட்டில் திரையரங்கில் உள்ள இருக்கைகளை ரசிகர்கள் உடைத்தனர்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வாரிசு - துணிவு படங்கள் வெளிவந்த சமயத்தில் ஒரு ரசிகரின் உயிர் கூட பறிபோனது. இப்படி தொடர்ந்து பல அதிர்ச்சியளிக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது.
இந்நிலையில் வட இந்தியாவில் இதே போன்ற அதிர்ச்சியளிக்கும் சம்பவம் நடந்துள்ளது. நேற்று சல்மான் கான் நடிப்பில் உருவான டைகர் 3 திரைப்படம் வெளிவந்தது.
இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடினார்கள். கொண்டாட்டத்தின் உச்சத்திற்கு சென்ற ரசிகர்கள் திரையரங்கிற்குலேயே பட்டாசு வெடிகளை கொளுத்தி போட அங்கு படம் பார்த்துக்கொண்டிருந்த மற்றவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
😀😀
— Christopher Kanagaraj (@Chrissuccess) November 12, 2023
Diwali Celeb by Bhai Fans “Inside” Theatre.🧨
pic.twitter.com/DBdziYJaoK