சிலரை எப்பவுமே ரீப்ளேஸ் பண்ணிட முடியாது - கவின் கல்யாணம் - உடைந்து போன லாஸ்லியா!

சிலரை எப்பவுமே ரீப்ளேஸ் பண்ணிட முடியாது - கவின் கல்யாணம் - உடைந்து போன லாஸ்லியா!

இலங்கையை சேர்ந்த தற்போது மாடலாக மாறியுள்ள நடிகை லாஸ்லியா திரையுலகில் படவாய்ப்பிற்காக தொடர்ந்து முயன்று வருகின்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்றார் இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லாஸ்லியா. தற்போது முழு நேர மாடலாக மாறியிருக்கும் லாஸ்லியா அவ்வப்போது படங்களில் நடித்து வருகின்றார்.

losliya-opens-up-about-kavin-marriage

தற்போது படவாய்ப்பிற்காக முயற்சிகளை மேற்கொண்டு வரும் லாஸ்லியா சமூகவலைத்தளங்களில் மிகவும் பரபரப்பாக இயங்கி வருகின்றார்.

லாஸ்லியா உடனான காதல் முறிவுக்கு பின்னர் மோனிகா டேவிட் என்பவரை காதலித்து கடந்த சில மாதங்களுக்கு முன் கவின் திருமணம் செய்துகொண்டார். நீண்ட நாட்களாக இது குறித்து பேசாமல் இருந்த லாஸ்லியா, சமீபத்திய பேட்டியில் கவின் திருமணம் குறித்து மனம்திறந்துள்ளார்.

losliya-opens-up-about-kavin-marriage

அந்த பேட்டியில், கவின் திருமணம் செய்துகொண்டதை அறிந்து சந்தோஷப்பட்டதாக கூறி கெரியரிலும் கவின் நல்ல நிலையில் இருக்கின்றார் என கூறினார். அவருக்காக தான் மிகவும் சந்தோஷப்படுவதாக கூறினார். மேலும், தன் தந்தையின் மறைவால் தான் மிகவும் உடைந்து போனதாக குறிப்பிட்ட லாஸ்லியா, இதுபற்றி தந்தை இறந்து 3 வருடங்கள் ஆகப்போகிறது என்பதை சுட்டிக்காட்டி, தற்போதும் அவரை தான் மிகவும் மிஸ் செய்வதாக குறிப்பிட்டார். 

LATEST News

Trending News

HOT GALLERIES