ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக ஒரு இடுப்பு போட்டோஷூட்.. 'வாழை' நடிகையின் வைரல் புகைப்படங்கள்..!

ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக ஒரு இடுப்பு போட்டோஷூட்.. 'வாழை' நடிகையின் வைரல் புகைப்படங்கள்..!

நடிகை ரம்யா பாண்டியன் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஒரே ஒரு இடுப்பு போட்டோஷூட் புகைப்படத்தால் மிகப்பெரிய அளவில் பிரபலமான நிலையில் தற்போது அவருக்கு போட்டியாக நடிகை திவ்யா துரைசாமி இடுப்பழகுடன் கூடிய புதிய போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

’இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான திவ்யா துரைசாமி அதன் பின்னர் சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ சுசீந்திரன் இயக்கத்தில் உருவான ’குற்றமே குற்றம்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்தார். தற்போது அவர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’வாழை’ என்ற திரைப்படத்தில் நாயகி ஆக நடித்து வருகிறார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் திவ்யா துரைசாமி ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் வைத்துள்ளார். அவ்வப்போது அவர் தனது சமூக வலைத்தளத்தில் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் சற்றுமுன் அவர் இடுப்பழகை வெளிப்படுத்தும் வகையில் புதிய போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்து ரம்யா பாண்டியனுக்கு போட்டியாக களம் இறங்கி விட்டீர்களா என ரசிகர்கள் கமெண்ட் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES