பிக்பாஸ் 7வது சீசனில் உறுதியான போட்டியாளர்கள் இவர்களா?- வெளிவந்த லிஸ்ட்..!
விஜய் தொலைக்காட்சியின் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் 7வது சீசன் வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி ஒளிபரப்பாக இருக்கிறது.
நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே நிறைய புதிய விஷயங்களை புரொமோவில் கூறி வருகின்றனர், ஒரு வீட்டிற்கு பதிலாக இரண்டு வீடுகள் வேறு இருக்கிறது.
எனவே நிகழ்ச்சி எப்படி இருக்கும், எப்படிபட்ட போட்டிகள் இருக்கும், எந்தெந்த பிரபலங்கள் வரப்போகிறார்கள் என நிறைய கேள்வி ரசிகர்களிடம் உள்ளது.
இந்த நிலையில் பிக்பாஸ் 7வது சீசனில் உறுதியாக கலந்துகொள்ள போகும் போட்டியாளர்கள் என சில பிரபலங்களின் பெயர்கள் அடிபடுகிறது.
அவர்கள் யார் யார் என்றால் சீரியல் பிரபலங்கள் ப்ருத்விராஜ், மௌன ராகம் புகழ் ரவீனா, ஆபிஸ் சீரியல் விஷ்ணு, பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் மற்றும் பிகில் பட புகழ் இந்துஜா ஆகியோர் உறுதியான போட்டியாளர்கள் என கூறப்படுகிறது.