இன்று முதல் 7 நாட்கள்.. சூர்யாவின் 'கங்குவா' படப்பிடிப்பு குறித்த சூப்பர் அப்டேட்..!
சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘கங்குவா’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று முதல் 7 நாட்கள் நடைபெறும் ஒரு சின்ன ஷெட்யூல் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்று முதல் தொடங்கும் ‘கங்குவா’ படப்பிடிப்பில் பிளாஷ்பேக் போர் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாகவும் இந்த காட்சியில் சூர்யா உட்பட ஒரு சிலர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த படப்பிடிப்பு முடிந்த பின்னர் அடுத்த கட்டமாக பாங்காக்கில் 25 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற உள்ளதாகவும், இந்த படப்பிடிப்புடன் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி விடும் என்று கூறப்படுகிறது.
வரும் நவம்பர் மாதத்திற்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பை முடிக்க இயக்குனர் சிறுத்தை சிவா திட்டமிட்டு இருப்பதாகவும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது
சூர்யா ஜோடியாக திஷா பதானி நடிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்தராஜ், ஜெகபதி பாபு, நடராஜன் சுப்பிரமணியம், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். ரூ.350 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.