எனது லட்டுகள்.. நடிகை மாதவியின் மகள்கள் என்ன அழகு.. லேட்டஸ்ட் புகைப்படம்..!

எனது லட்டுகள்.. நடிகை மாதவியின் மகள்கள் என்ன அழகு.. லேட்டஸ்ட் புகைப்படம்..!

நடிகை மாதவி தனது மூன்று மகள்கள் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து ’எனது லட்டுக்கள்’ என்று கேப்ஷனாக பதிவு செய்ததை அடுத்து இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

கடந்த 70கள் மற்றும் 80களில் தமிழ் திரை உலகின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை மாதவி. இவர் ரஜினியுடன் ’தில்லுமுல்லு’ ’கர்ஜனை’ ’தம்பிக்கு எந்த ஊரு’ ’விடுதலை’ உள்ளிட்ட படங்களிலும் கமல்ஹாசன் உடன் ’ராஜபார்வை’ ’டிக் டிக் டிக்’ ’எல்லாம் இன்பமயம்’ ’சட்டம்’ ’காக்கிச்சட்டை’ ’மங்கம்மா சபதம்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். 

தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஹிந்தி போன்ற மொழிகளில் இவர் ஏராளமான படங்களில் நடித்த நிலையில் நடிகை மாதவி தொழில் அதிபர் ரால்ஃப் சர்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு மூன்று மகள்கள் அடுத்தடுத்து பிறந்தனர். தற்போது நடிகை மாதவி தனது கணவர் மற்றும் மகள்களுடன் நியூ ஜெர்சியில் வாழ்ந்து வருகிறார். 

இந்த நிலையில் சமூக வலைதளத்தில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் மாதவி சமீபத்தில் தனது மூன்று மகன்கள் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து ’எனது லட்டுகள்’ என்று கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் மாதவியின் மகள்களுக்கு தங்களது தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES