கிளாமர் உடையில் கண்களை மூடி ஒரு தியானம்.. நடிகை காயத்ரி சங்கர் லேட்டஸ்ட் புகைப்படம்..!
நடிகை காயத்ரி சங்கர் கிளாமர் உடையில் கண்களை மூடி தியானம் செய்வது போல உட்கார்ந்து இருக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து உள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
விஜய் சேதுபதி உடன் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ ’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ ’புரியாத புதிர்’ ’சூப்பர் டீலக்ஸ்’ ‘சீதக்காதி’ ’மாமனிதன்’ உள்ளிட்ட படங்களில் நடித்த காயத்ரி சங்கர், கமல்ஹாசனின் ’விக்ரம்’ படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இந்த நிலையில் நடிகை காயத்ரி சங்கர் இன்ஸ்டாகிராமில் ஆயிரக்கணக்கான ஃபாலோயர்களை வைத்திருக்கும் நிலையில் சமீப காலமாக அவர் கிளாமர் புகைப்படங்கள் உட்பட பல புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து வருகிறார். மேலும் அவர் சமீபத்தில் ஜப்பான் சுற்றுப்பயணம் செய்த புகைப்படங்களும் பதிவாகியுள்ளன.
இந்த நிலையில் சற்று முன் அவர் இயற்கை எழில் கொஞ்சம் ஒரு அற்புதமான இடத்தில் கிளாமர் உடையில் தரையில் உட்கார்ந்து கண்களை மூடிக்கொண்டு தியானம் செய்வது போல் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். ’கண்களை மூடிக்கொண்டு சும்மா இருப்பதே மிகப்பெரிய அழகு’ என்று அவர் கேப்ஷனாக பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்களுக்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட் புரிந்து வருகிறது.