மீண்டும் போலீஸ் கேரக்டர்.. மீண்டும் அனிருத்.. சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்..!

மீண்டும் போலீஸ் கேரக்டர்.. மீண்டும் அனிருத்.. சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் மாஸ் அப்டேட்..!

நடிகர் சிவகார்த்திகேயன் ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான ’காக்கிச்சட்டை’ என்ற திரைப்படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்த நிலையில் தற்போது 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு போலீஸ் கேரக்டரில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் ஒரு திரைப்படம் உருவாக இருப்பதாக வெளியான செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த படம் குறித்த அடுத்த அப்டேட் வெளியாகியுள்ளது.

ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் போலீஸ் கேரக்டரில் நடிக்க இருப்பதாகவும் இந்த கேரக்டர் மாஸாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக மிருணாள் தாக்கூர் நடிக்க இருப்பதாகவும், அது மட்டுமின்றி சிவகார்த்திகேயனுடன் மீண்டும் அனிருத் இணைய இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது ’எஸ்கே 21’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் சிவக்கார்த்திகேயன் இந்த படத்தை முடித்தவுடன் ஏஆர் முருகதாஸ் படத்தில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் கம்பேக் கொடுக்க வேண்டிய நிலையில் இருப்பதால் அவர் நிச்சயம் இந்த படத்தை வெற்றி படமாக இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES