பிக் பாஸ் வீட்டுக்கு வரும் கயல் சீரியல் நடிகை.. யார் பாருங்க.
பிக் பாஸ் 7ம் சீசன் விரைவில் விஜய் டிவியில் தொடங்க இருக்கிறது. அதற்கான முதற்கட்ட பணிகளை தற்போது நடந்த வருகிறது.
மேலும் இந்த சீஸனில் இரண்டு பிக் பாஸ் வீடுகள் இருக்கும் என்றும், போட்டியாளர்கள் இரண்டாக பிரிக்கப்பட்டு தங்க வைக்க பட போகிறார்கள் என முன்பு தகவல் வெளியானது.
இந்நிலையில் கயல் சீரியல் நடிகை அன்னபூரணி என்பவர் பிக் பாஸ் வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அவர் நர்ஸ் வேலை செய்யும் கயல் தோழியாக சீரியலில் நடித்து வருகிறார்.
அன்னபூரணி பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் பார்வையற்ற ஆசிரியையாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படம் மூலமாக புகழ் பெற்ற அவர் தற்போது பல சீரியல்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்து.
அவர் பிக் பாஸ் செல்வதாக தற்போது தகவல் பரவி வரும் நிலையில் அவர் ஷோவுக்கு வருகிறாரா இல்லையா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.