தென்னிந்திய சினிமா நடிகைகளில் அதிகம் சொத்து வைத்துள்ள நடிகைகள் யார்- டாப் 5 லிஸ்ட்!!
சினிமா தொழில் தான் இப்போது உள்ள எல்லா தொழில்களிலும் டாப்பில் உள்ளது, அதாவது அதிகம் சம்பாதிக்கக் கூடிய ஒரு தொழில்.
இதில் இப்போது ஆண்டுகளுக்கு நிகராக பெண்களும் சம்பாதித்து வருகிறார்கள், அதை நாமும் பார்க்கிறோம்.
நடிகர்கள் ரூ. 100 கோடி சம்பளத்தை எப்போதோ தொட ஆரம்பித்துவிட்டார்கள், ஆனால் நாயகிகள் ஒரு கோடியை பெறவே நீண்ட காலம் ஆகிவிட்டது.
தற்போது ஜவான் படத்திற்காக மட்டும் நடிகை நயன்தாரா ரூ. 11 கோடி வரை சம்பளம் பெற்றதாக ஒரு தகவல் உள்ளது.
இவரைத் தாண்டி சமந்தா, ராஷ்மிகா போன்ற நாயகிகளும் இப்போது ஹீரோக்களுக்கு நிகராக படங்கள் நடித்து சம்பளமும் அதிகம் வாங்கி வருகிறார்கள்.
எனவே நாயகிகளின் சொத்தும் அதிகமாகி வருகிறது. அப்படி சினிமாவை தாண்டி சில தொழில்கள் செய்தும் சம்பாதிக்கும் நாயகிகளின் சொத்து விவரங்களை பார்ப்போம்.
அதிலும் டாப் 5ல் இருக்கும் நாயகிகளின் சொத்து விவரம் இதோ,
- நயன்தாரா- ரூ. 165 கோடி
- தமன்னா- ரூ. 110 கோடி
- அனுஷ்கா- ரூ. 100 கோடி
- சமந்தா- ரூ. 89 கோடி
- பூஜா ஹெக்டே- ரூ. 50 கோடி