நயன்தாராவின் அடுத்த பட டிரைலர் ரெடி.. ரிலீஸ் எப்போது..!

நயன்தாராவின் அடுத்த பட டிரைலர் ரெடி.. ரிலீஸ் எப்போது..!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, ஷாருக்கானுடன் நடித்த ’ஜவான்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில் தற்போது அவர் நடித்த அடுத்த படத்தின் டிரைலர் தயாராக இருப்பதாகவும் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த டிரைலர் ரிலீஸ் ஆகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.  

நடிகை நயன்தாரா நடித்துக் கொண்டிருக்கும் படங்களில் ஒன்று ’இறைவன்’. ஜெயம் ரவி நாயகனாக நடித்துள்ள இந்த படத்தை ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ படங்களை இயக்கிய அகமது இயக்கி உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்ததாக செய்திகள் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.  

ஆகஸ்ட் 25ஆம் தேதி இந்த படம் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இறுதிகட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆக தயாராக இருப்பதாகவும் இரண்டு நிமிடங்களுக்கு மேல் உள்ள இந்த ட்ரெய்லர் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.  

தனி ஒருவன் படத்திற்கு பின்னர் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா இணைந்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். ஹரி வேதாந்த் ஒளிப்பதிவில் மணிகண்ட பாலாஜி படத்தொகுப்பில் உருவாகி உள்ள இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES