4 மொழிகளில் உருவாகும் பிரபுதேவாவின் 60வது படம்.. முக்கிய அப்டேட்..!

4 மொழிகளில் உருவாகும் பிரபுதேவாவின் 60வது படம்.. முக்கிய அப்டேட்..!

நடிகர், இயக்குனர் மற்றும் நடன இயக்குனர் பிரபுதேவாவின் 60வது படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது

பிரபுதேவா நடிப்பில் வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘வுல்ஃப்’. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

அம்பரீஷ் இசையில் அருள் வின்சென்ட் ஒளிப்பதிவில் கிஷோர் படத்தொகுப்பு பணியில் உருவாகி வரும் இந்த படம் விரைவில் படப்பிடிப்பு விரைவில் நிறைவடையவுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் டீசர் நாளை மறுநாள் அதாவது ஆகஸ்ட் 3ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து புதிய போஸ்டரும் வெளியாகி உள்ள நிலையில் அந்த போஸ்டர் தற்போது வைரல் ஆகி வருகிறது.

பிரபுதேவாவுடன் அனுசுயா பரத்வாஜ், ராய் லட்சுமி, வசிஷ்டா சிம்ஹா, ரமேஷ் திலக், அஞ்சு குரியன், ஸ்ரீ கோபிகா உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என நான்கு மொழிகளில் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES