பிரபலங்கள் ஆர்யா-சயீஷா மகள் ஆர்யானா பிறந்தநாள் கொண்டாட்டம்- வீடியோவுடன் இதோ.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் ஆர்யா. இவர் நடிப்பில் அண்மையில் காதர் பாட்ஷா என்ற படம் வெளியாகி சாதாரண வரவேற்பை பெற்றது.
அடுத்தடுத்து சார்பட்டா பரம்பரை 2, பாஸ் என்கிற பாஸ்கரன் 2 போன்ற படங்கள் வெளியாக இருக்கின்றன. சினிமாவை தாண்டி ஆர்யாவிற்கு கடந்த 2019ம் ஆண்டு நடிகை சயீஷாவுடன் திருமணம் நடந்தது.
பின் 2021ம் ஆண்டு இவர்களுக்கு பெண் குழந்தையும் பிறந்தது, ஆர்யானா என்ற மகள் உள்ளார். தனது மகள் பெயரிலேயே இவர்கள் ஒரு இன்ஸ்டா பக்கமும் திறந்து புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
ஆர்யா-சயீஷா இருவரும் தங்களது மகளின் இரண்டாவது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி உள்ளனர்.
மகளின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை வீடியோ பதிவு செய்து அதனை தனது யூடியூப் பக்கத்தில் பதிவேற்றி இருக்கிறார் நடிகை சாயிஷா. அந்த வீடியோ 3 லட்சத்துக்கும் மேல் பார்வைகளைப் பெற்று டிரெண்டாகி வருகிறது.