பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை பரீனாவா இது- முடியை கட் செய்து ஆளே மாறியிருக்கிறாரே...
விஜய் தொலைக்காட்சியில் பிரவீன் பென்னட் இயக்க மிகவும் பரபரப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் தொடர் பாரதி கண்ணம்மா.
இதில் அருண்-ரோஷினி முக்கிய நாயகிகளாக நடிக்க பரீனா ஆசாத் வில்லியாக றடித்தார். ஒரேஒரு DNA டெஸ்ட் ரிசல்ட் வைத்து ஒருவரின் வாழ்க்கையை வீணாக்கி வந்தார்.
ஒருவழியாக கதை முடிய ரசிகர்கள் புதிய சீரியலுக்காக காத்திருந்தனர். ஆனால் பாரதி கண்ணம்மா என்ற பெயரில் 2வது சீசன் வந்தது, அதில் சிப்பு சூரியன் மற்றும் வினுஷா ஜோடியாக நடித்து வருகின்றனர்.
தற்போது இந்த 2வது சீசன் சீரியலும் முடியப்போகிறதாக கூறப்படுகிறது.
இந்த 2வது சீசனிலும் வில்லியாக நடிக்கும் பரீனாவிற்கு நீளமான முடி. ஆனால் அவர் தனது முடியை பாதியாக கட் செய்து புதிய லுக்கில் காணப்படுகிறார். அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல லைக்ஸ் கிடைத்தும் வருகிறது.