நடிகை ரம்பாவின் சொத்து மதிப்பு எவ்வளவு? ஹீரோயினை மிஞ்சிய மகளின் கியூட் புகைப்படம்...
நடிகை ரம்பா தனது மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி வாழ்த்துக்களை குவித்து வருகின்றது.
நடிகை ரம்பா உள்ளத்தை அள்ளித் தா படத்தின் மூலம் தமிழில் திரையுலகிற்கு அறிமுகமாக 90களில் கனவுகன்னியாக வலம் வந்தவர். தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை தனது க்யூட் நடிப்பால் உருவாக்கினார்.
2010ம் ஆண்டு இலங்கையை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு நீதிமன்றம் வரை சென்றவர்கள், மகன் பிறந்த பின்பு மீண்டும் திரும்ப சேர்ந்து வாழ விரும்பிய நிலையில் வழக்கு திரும்பப் பெறப்பட்டது.
லான்யா, சாஷா என்ற மகள்களும், ஷிவின் என்ற மகனுடன் மகிழ்ச்சியாக இருந்து வரும் ரம்பா, தனது குடும்ப புகைப்படத்தினை அவ்வப்போது பதிவிட்டு வருகின்றார்.
தற்போது மூத்த மகள் லான்யாவின் பள்ளியில் சமீபத்தில் நடந்த கிராஜுவேஷன் புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இந்நிகழ்விற்கு ரம்பாவுடன் அவரது கணவரும் சென்றுள்ளார்.
அச்சு அசல் அம்மாவைப் போன்று இருக்கும் ரம்பாவின் மகளுக்கு ரசிகர்களை வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், அடுத்த ஹீரோயின் என்று கொண்டாடி வருகின்றனர்.
திருமணத்திற்கு பின்பு நடிப்பிலிருந்து ஒதுங்கிய நடிகை ரம்பாவின் சொத்து மதிப்பு 3 மில்லியன் டொலர் வரை இருப்பதாக கூறப்படுகின்றது.
ரம்பாவின் கணவர் இந்திரகுமார் மேஜிக்வுட்ஸின் சிஇஓ-வாக இருந்து வருகின்றார். இவர் இலங்கையில் பிறந்து கனடாவில் வாழ்பவர் என்றாலும் சென்னையில் இவர்களின் தொழிற்சாலை ஒன்றும் உள்ளதாம்.
இந்த நிறுவனம் சமையலறை மற்றும் படுக்கை அறை, குளியல் அறை உபகரணங்கள் தயாரித்து விற்பனை செய்வதாகும்.