சம்பளத்தை உயர்த்திய சிம்பு.. இத்தனை கோடி கேட்கிறாரா...

சம்பளத்தை உயர்த்திய சிம்பு.. இத்தனை கோடி கேட்கிறாரா...

நடிகர் சிம்பு உடல் எடையை குறைத்த பிறகு மீண்டும் பிசியாக படங்கள் நடித்து ஹிட் கொடுக்க தொடங்கி இருக்கிறார். மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய படங்கள் ஹிட் ஆனது. பத்து தல படமும் மிகப்பெரிய வெற்றி என தயாரிப்பாளரே அறிவித்துவிட்டார்.

அடுத்து அவர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் STR 48 படத்தில் நடிக்க இருக்கிறார். அதற்கான முதற்கட்ட பணிகளும் நடந்து வருகிறது.

சம்பளத்தை உயர்த்திய சிம்பு.. இத்தனை கோடி கேட்கிறாரா? | Simbu Hikes His Salary

 

சிம்பு தொடர்ந்து ஹிட் கொடுத்து வரும் நிலையில் தற்போது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறாராம். அவர் ஒரு படத்திற்கு 20 கோடி ருபாய் சம்பளமாக தற்போது கேட்கிறாராம்.

சிம்புவின் அடுத்தடுத்த படங்கள் ரிசல்ட்டை பொறுத்து மேலும் சம்பளத்தை அவர் உயர்த்த வாய்ப்பும் இருக்கிறது. 

LATEST News

Trending News