கேரவனில் நெப்போலியனை அசிங்கப்படுத்திய விஜய்! பிரச்சனைக்கு இதுதான் காரணம்
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர். அவர் தற்போது ஒரு படத்திற்கு 125 கோடி அளவுக்கு சம்பளம் வாங்கும் அளவுக்கு வளர்ந்து இருக்கிறார்.
அவருக்கு பல முக்கிய நடிகர்களே ரசிகர்களாக இருக்கின்றனர். ஆனால் நான் விஜய் படத்தை பார்க்கவே மாட்டேன் என நடிகர் நெப்போலியன் கோபமாக முன்பு பேட்டி அளித்து இருக்கிறார்.
போக்கிரி படத்தில் ஒன்றாக பணியாற்றிய அவர்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டது என கூறப்பட்டது. அதற்கு பிறகு விஜய் உடன் மீண்டும் இனைந்து நடிக்க தயார் என 15 வருடங்களுக்கு பிறகு இன்னொரு பேட்டியில் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் நெப்போலியன் விஜய் மீது செம கோபத்தில் இருக்க என்ன காரணம் என இயக்குனர் ராசி அழகப்பன் பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.
விஜய் கேரவனில் உடை மாற்றிக்கொண்டு அடுத்த காட்சிக்காக தயாராகி கொண்டிருந்த நேரத்தில் நெப்போலியன் அவரது நண்பர் ஒருவரை அழைத்துக்கொண்டு விஜய்யின் கேரவனுக்கு சென்றாராம். அதை எதிர்பார்க்காத விஜய் உள்ளே இருந்து கோபமாக எதோ சில வார்த்தைகள் சொல்ல, அது நெப்போலியன் காதில் விழுந்திருக்கிறது.
அதனால் அவர் கோபத்தில் வெளியேறிவிட்டாராம். அதனால் தான் நெப்போலியன் விஜய் மீது இத்தனை வருடங்களாக கோபத்தில் இருக்கிறாராம்.