அஜித்தை அடுத்து பூடான் நாட்டிற்கு சென்ற 'மங்காத்தா' நடிகை..!
நடிகர் அஜித் சமீபத்தில் உலக பைக் சுற்று பயணத்தின் ஒரு பகுதியாக பூடான் மற்றும் நேபாளம் சென்றார் என்பதும் அங்கு அவரை அடையாளம் கண்டு கொண்ட அந்நாட்டு ரசிகர்கள் அஜித்துடன் புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்தார்கள் என்பதையும் பார்த்தோம்.
இந்த நிலையில் அஜித்தை அடுத்து அவருடன் ‘மங்காத்தா’ திரைப்படத்தில் நடித்த நடிகை ஆண்ட்ரியாவும் பூடான் சென்றுள்ளார். அவர் அங்குள்ள முக்கிய இடங்களில் இருக்கும் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பூடானில் மூன்று முக்கிய விஷயங்கள் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார் பூடான் நாட்டில் இமயமலையின் ராஜ்யத்தையும் அதன் நிலப்பரப்புகளையும் மகிழ்ச்சியாக கண்டு களிக்கலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்த நாட்டில் நடை பயணம் செய்தாலே சுத்தமான காற்றை சுவாசிக்கலாம் என்றும் பௌத்த பூமியான இந்த நாட்டில் ஆன்மீகத்தை முழுமையாக உணர முடியும் என்றும் இந்த பயணம் தனக்கு ஒரு மறக்க முடியாத பயணமாக இருந்தது என்றும் அவர் பதிவு செய்துள்ளார்
பூடானில் ஆண்ட்ரியா இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.