பப்ளிசிட்டிக்காக விவாகரத்து போட்டோஷூட் எடுக்கல, இதற்காக தான்.. உண்மையை சொன்ன நடிகை

பப்ளிசிட்டிக்காக விவாகரத்து போட்டோஷூட் எடுக்கல, இதற்காக தான்.. உண்மையை சொன்ன நடிகை

பிரபல சீரியல் நடிகை ஷாலினி கடந்த சில தினங்களுக்கு முன்பு தனக்கு விவாகரத்து கிடைத்து இருப்பதை கொண்டாடும் விதமாக போட்டோஷூட் எடுத்து வெளியிட்டு இருந்தார்.

 அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரல் ஆனது. அதில் அவர் திருமண போட்டோவை கிழிப்பது, முன்னாள் கணவர் போட்டோவை காலால் மிதிப்பது என செய்திருந்த சில விஷயங்களுக்கு சில கண்டனமும் தெரிவித்து இருந்தனர்.

போட்டோக்கள் வைரல் ஆன நிலையில் பல விதமாக வரும் கமெண்டுகள் பற்றி நடிகை ஷாலினி தற்போது பேசி இருக்கிறார்.

"நான் தற்போது பேட்டி கொடுக்க விரும்பவில்லை. இந்த போட்டோஷூட்டை நான் பப்ளிசிட்டிக்காக எடுக்கவில்லை. இதே சூழ்நிலையில் இருக்கும் மற்ற பெண்களுக்கு மெசேஜ் சொல்லும் விதமாக தான் இதை எடுத்தேன்" என ஷாலினி கூறி இருக்கிறார். 

LATEST News

Trending News

HOT GALLERIES