'வாரிசு' வசூல் தகவல்களுக்கு பதிலடி கொடுத்த 'துணிவு' விநியோகிஸ்தர்: வைரல் வீடியோ

'வாரிசு' வசூல் தகவல்களுக்கு பதிலடி கொடுத்த 'துணிவு' விநியோகிஸ்தர்: வைரல் வீடியோ

தளபதி விஜய் நடித்த ’வாரிசு’ மற்றும் தல அஜித் நடித்த ‘துணிவு’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளியானது என்பதும் இந்த இரண்டு திரைப்படங்களுமே நல்ல வசூலை வாரி வழங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’வாரிசு’ படத்தின் வசூல் நிலவரங்களை அவ்வப்போது அந்த படத்தின் குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து வந்த நிலையில் ‘துணிவு’ படக்குழுவினர் எந்தவித வசூல் தகவலையும் அறிவிக்கவில்லை.

குறிப்பாக கடந்த இரண்டு நாட்களுக்கு முன் ’வாரிசு’ படம் ரூபாய் 250 கோடி ரூபாய் உலகம் முழுவதும் வசூல் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த தகவலை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.

இந்த நிலையில் ‘துணிவு’ படத்தின் விநியோகிஸ்தர்களில் ஒருவரான ராகுல் தனது ட்விட்டர் பக்கத்தில் 'இந்த ஆண்டின் முதல் பிளாக்பஸ்டர் திரைப்படம் ‘துணிவு’ என்று பதிவு செய்து ’வாரிசு’ பட வசூல் தகவல்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார். மேலும் ‘துணிவு’ படத்தின் கிளிப்பிங்ஸ் வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இருப்பினும் ‘துணிவு’ படத்தின் வசூல் எவ்வளவு என்பதை குறித்த தகவல்களை இன்னும் அவர் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES