'தங்கலான்' படத்தின் மேக்கப்.. பா ரஞ்சித் கூறிய ஆச்சரிய தகவல்

'தங்கலான்' படத்தின் மேக்கப்.. பா ரஞ்சித் கூறிய ஆச்சரிய தகவல்

இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகிவரும் 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் விக்ரம் நடித்து வரும் நிலையில் அவரது மேக்கப் குறித்து ஆச்சரியமான தகவலை இயக்குனர் பா ரஞ்சித் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

நடிகர் விக்ரம் 'தங்கலான்' படத்தில் மிகவும் உள்ளுணர்வுடன் நடித்து வருவதாகவும் அவர் மேக்கப்பிற்கு மட்டும் தினமும் 4 மணி நேரம் செலவு செய்து செலவு செய்கிறார் என்றும் அவர் ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து நடிப்பதால் இந்த படம் மிகவும் இயல்பாக வந்து உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நடிகர் விக்ரம் பல திரைப்படங்களில் மேக்கப் போட பல மணி நேரம் செலவு செய்து இருப்பதால் 'தங்கலான்' படத்திற்கு 4 மணிநேரம் செலவு செய்வதில் எந்த விதமான ஆச்சரியமில்லை என்று அவரது ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். இருப்பினும் 'தங்கலான்' படம் விக்ரம் திரையுலக வாழ்க்கையில் ஒரு வித்தியாசமான படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்க வயலில் நடைபெற இருப்பதாகவும் இந்த படத்தை இந்த ஆண்டு முக்கிய திருவிழா ஒன்றில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விக்ரமுடன் பார்வதிமேனன், மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார்.

LATEST News

Trending News