'அவள் வைத்திருக்கும் ஆயுதமே வேறு': சன்னிலியோனின் 'ஓ மை கோஸ்ட்' டிரைலர்!

'அவள் வைத்திருக்கும் ஆயுதமே வேறு': சன்னிலியோனின் 'ஓ மை கோஸ்ட்' டிரைலர்!

பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் நடித்த தமிழ் திரைப்படம் ‘ஓ மை கோஸ்ட்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகவும் இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் இந்த படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. சுமார் 3 நிமிடங்கள் உள்ள இந்த ட்ரெய்லரில் காமெடி மற்றும் த்ரில் காட்சிகள் அடங்கியுள்ளன.

சன்னி லியோன் ராணி மற்றும் பேய் ஆகிய இரண்டு விதமான கேரக்டர்களில் நடித்துள்ளார். பிளாஷ்பேக் காட்சிகள் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டிருக்கும் என தெரிகிறது.

சதீஷ், யோகி பாபு, ஜி பி முத்து, ரமேஷ் திலக் உள்ளிட்டவர்கள் காமெடி காட்சிகள் சன்னி லியோனின் கிளாமர் காட்சிகள் ஆகியவை படத்தின் பலமாக இருக்கும் என்று இந்த படத்தின் டிரெய்லரில் இருந்து தெரிய வருகிறது.

சன்னிலியோன், சதீஷ், யோகி பாபு, ஜிபி முத்து, தர்ஷா குப்தா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை யுவன் இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாக்கிய இந்த படம் விரைவில் ரிலீசாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News