மருத்துவமனைக்கு சென்று சமந்தாவை பார்த்தாரா நாக சைதன்யா? பரபரப்பு தகவல்!

மருத்துவமனைக்கு சென்று சமந்தாவை பார்த்தாரா நாக சைதன்யா? பரபரப்பு தகவல்!

நடிகை சமந்தா சமீபத்தில் அரிய வகை நோய் ஒன்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரை அவருடைய முன்னாள் கணவர் நாக சைதன்யா மருத்துவமனையில் சென்று பார்த்ததாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தான் மயோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் இதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியதோடு மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தார்.

இதனையடுத்து அவர் விரைவில் குணமாக வேண்டும் என திரையுலகினர் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் பல ரசிகர்கள் சமந்தாவுக்கு ஆறுதலாக சில வார்த்தைகள் நேரில் சென்று நாக சைதன்யா கூற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று சமந்தாவை மருத்துவமனையில் நாக சைதன்யா சென்று பார்த்ததாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து இரு தரப்பினரும் விசாரித்தபோது இந்த செய்தி முழுக்க முழுக்க வதந்தி என்று தெரியவருகிறது.

சமந்தா தற்போது மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பி விட்டதாகவும் அதேபோல் நாகசைதன்யா தற்போது படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதாகவும் எனவே சமந்தாவை மருத்துவமனையில் சென்று நாக சைதன்யாவை பார்த்ததாக கூறப்படுவது முழுக்க முழுக்க வதந்தி என்றும் தெரியவந்துள்ளது.

LATEST News

Trending News