ரஜினி, கமல், விஜய், ஷாருக்கான்.. அடுத்து யாருடன் மோதுகிறார் விஜய்சேதுபதி?
ரஜினி, கமல், விஜய், ஷாருக்கான் ஆகிய முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக பிரபல நடிகர் ஒருவருடன் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’பேட்ட’ உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’விக்ரம்’ தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ ஷாருக்கான் நடித்து வரும் ’ஜவான்’ ஆகிய திரைப்படங்களில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார் என்பதும் விஜய்சேதுபதி வில்லனாக நடித்து இதுவரை வெளியான அனைத்து படங்களும் சூப்பர்ஹிட் ஆகின என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ரஜினி, கமல், விஜய், ஷாருக்கான் ஆகியோர்களை தொடர்ந்து மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
தேசிய விருது பெற்ற ’காக்கா முட்டை’ என்ற படத்தை இயக்கிய மணிகண்டன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது