துணை இயக்குனர்களை அடிப்பேன், காலால் எட்டி உதைப்பேன்.. பிக் பாஸ் ஆயீஷாவின் அதிர்ச்சியளிக்கும் வேறொரு முகம்

துணை இயக்குனர்களை அடிப்பேன், காலால் எட்டி உதைப்பேன்.. பிக் பாஸ் ஆயீஷாவின் அதிர்ச்சியளிக்கும் வேறொரு முகம்

பிக் பாஸ் நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த பிக் பாஸ் 6ல் 20 போட்டியாளர்கள் கலந்துகொண்டுள்ளார்கள். அதில் ஒருவர் தான் சீரியல் நடிகை ஆயீஷா.

இவர் முதன் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பொன்மகள் வந்தால் சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதன்பின் அங்கு ஏற்பட்ட சில பிரச்சனையின் காரணமாக ஜீ தமிழுக்கு சென்று சத்யா எனும் சீரியலில் கதாநாயகியாக நடிக்க துவங்கினார்.

சத்யா ஜீ தமிழின் சூப்பர் ஹிட் சீரியல்களில் ஒன்றாகும். மீண்டும் விஜய் டிவிக்கு வந்துள்ள ஆயீஷா தற்போது பிக் பாஸ் சீசன் 6ல் கலந்துகொண்டுள்ளார்.

ஆயீஷா கொடுத்த அதிர்ச்சி

24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சியில் தன்னுடைய சீரியல் துணை இயக்குனர்கள் குறித்து மிகவும் மோசமான வகையில் பேசியுள்ளார் ஆயீஷா.

அதாவது, சீரியலின் படப்பிடிப்பின் போது ஆயீஷா தூங்கி கொண்டு இருந்தால், அவரை எழுப்ப வரும் துணை இயக்குனர்களை அடிப்பாராம். அதுமட்டுமின்றி காலால் எட்டி உதைப்பாராம். இதனாலேயே பல துணை இயக்குனர்கள் அவரை தூக்கத்தில் இருந்து எழுப்ப பயப்படுவார்கள் என்று திமிராக பேசியுள்ளார்.

வீட்டிற்குள் சிரித்து பேசி, ஜாலியாக இருந்து வரும் ஆயீஷாவின் மற்றொரு முகம் சற்று ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளது.

LATEST News

Trending News