ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்ணம்: நவராத்திரியை நவரசமாக கொண்டாடும் அதிதி ஷங்கர்!

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்ணம்: நவராத்திரியை நவரசமாக கொண்டாடும் அதிதி ஷங்கர்!

நவராத்திரி விழா இந்தியா முழுவதும் 9 நாட்கள் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இந்த நவராத்திரியின் முதல் நாளிலிருந்து ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு கலரில் வண்ண வண்ண ஆடை அணிந்து நடிகை அதிதி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கத்தில் உருவான ’விருமன்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமானார் என்பதும், முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்து விட்டார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’மாவீரன்’ திரைப்படத்தில் நடித்து வரும் அதிதி ஷங்கர் அடுத்ததாக விஷ்ணுவர்தன் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் நவராத்திரி திருவிழா சமீபத்தில் ஆரம்பமான நிலையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்ணத்தில் தேவதை போன்ற போட்டோஷூட் புகைப்படங்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதில் ஷங்கர் பதிவு செய்து வருகிறார்.

முதல் நாளில் கோல்டன் கலரில் உடை உடுத்திய அதிதி ஷங்கர் இரண்டாவது நாளில் சிகப்பு கலரில் தேவதை போல் காட்சியளித்தார். மூன்றாவது நாளில் நீல நிற உடை அணிந்த ஜொலித்த அதிதி ஷங்கர் , நான்காவது நாளில் தங்க நிறத்தில் தகதகவென மின்னும் புகைப்படங்களை பதிவு செய்தார். ஐந்து நாளில் பச்சை வண்ண மயில் போல் காட்சியளித்த அதிதி ஷங்கர் ஆறாவது நாளில் கிரே கலரில் புடவை அணிந்து இரசிகர்களை மயக்கினார். ஏழாவது நாளில் ஆரஞ்சு நிறத்தில் அழகு பொம்மையாய் ஜொலித்த அதிதி ஷங்கர் 8-வது நாளான நேற்று மயில் பச்சை நிறத்தில் உடையணிந்து அசத்தியுள்ளார்.

இந்த 8 நாட்களிலும் அவர் பதிவு செய்த போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வரும் நிலையில் இன்று அதாவது ஒன்பதாவது நாளில் அவர் எந்த கலரில் உடை அணிந்து வருகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

LATEST News

Trending News