இணையத்தை கிடுகிடுக்க வைத்த வாணி போஜன்

இணையத்தை கிடுகிடுக்க வைத்த வாணி போஜன்

பிரபல சீரியல் நடிகை வாணி போஜன் தற்போது சினிமாவில் ஹீரோயினாக நடிக்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார். மாடல் அழகியான இவர் விளம்பர படங்களில் நடித்து வந்தார் அதன்மூலம் கிடைத்த வாய்ப்பை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு தற்போது சினிமாவிலும் நுழைந்துள்ளா.இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் நடித்த தெய்வமகள் என்ற சீரியல் தான் பெருவாரியான ரசிகர்களை இவருக்கு கொடுத்தது. சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகை வாணி போஜன் இந்த சீரியல் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆனார்.

தொடர்ந்து படங்களில் நடித்து வரும் இவர் சமீபத்தில் ஓ மை கடவுளே என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.தற்பொழுது 32 வயதாகும் இவர் ஊட்டியில் பிறந்தவர். ஊட்டியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ., ஆங்கிலம் படித்த இவர் கல்லூரியில் படித்த முடித்தவுடன் மாடலிங் துறையில் நுழைந்தார்.

கடந்த 2010ஆம் ஆண்டு திகில் படமான ஓரிரவு என்ற திரைப் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவர் 2012ஆம் ஆண்டு அதிகாரம் 79 என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆஹா மற்றும் ஜெயா டிவியில் ஒளிபரப்பான மாயா உள்ளிட்ட இடங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் தெய்வமகள் சீரியலில் ஹீரோயினாக நடித்திருந்தார்.

இந்த சீரியல் தான் இவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலம் ஆகியது என்று கூற வேண்டும். தற்போது கிட்டத்தட்ட ஒரு டஜன் படங்களில் நடித்து வருகிறார் நடிகை வாணி போஜன்.  நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான மகான் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். படத்தின் நீளம் கருதி அவர் நடித்திருந்த காட்சிகள் நீக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பகைவனுக்கு அருள்வாய், காஸினோ, பாயும் ஒழி நீ எனக்கு, தாள் திறவாய், ஊர் குருவி, ரேக்ளா, கொலைகார கைரேகைகள் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.மட்டுமில்லாமல் வெப்சீரிஸிலும் கவனம் செலுத்தி வரும் இவர் தற்போது சோனி LIV-ல் ஓடிக் கொண்டிருக்கும் தமிழ் ராக்கர்ஸ் என்ற சீரியலிலும் நடித்து உள்ளார். இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவை சகிதமாக தன்னுடைய பின்னழகை எடுப்பாக தெரிய போஸ் கொடுத்துள்ள இவரது புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

LATEST News

Trending News

HOT GALLERIES