அரவிந்த்சாமியின் அடுத்த படம் ரிலீஸ் தேதி: அதிகாரபூர்வ அறிவிப்பு!
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அரவிந்த் சாமியின் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கிய ’தளபதி’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி ’ரோஜா’ என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக நடித்த அரவிந்த்சாமி பல வெற்றி படங்களை தந்துள்ளார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் அரவிந்த்சாமி நடிப்பில் உருவாகியுள்ள 5 படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் தற்போது அதில் ஒரு படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அரவிந்த்சாமி நடிப்பில் ஃபெல்லினி என்பவரது இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ரெண்டகம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிவடைந்த நிலையில் தற்போது அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படம் செப்டம்பர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரவிந்த்சாமி, குஞ்சாக்கோ போபன், ஜாக்கி ஷெராப் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த மோஷன் போஸ்டர் சற்றுமுன் வெளியாகிய நிலையில் இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. கௌதம் சங்கர் ஒளிப்பதிவில், அப்பு என். பட்டதாரி படத்தொகுப்பில் அருள்ராஜ் கென்னடி இசையில் உருவாகிய இந்த படம் அரவிந்த்சாமியின் வெற்றி படங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.