நான் இந்த படத்தின் ஹீரோயின் என்பதை நம்பவே முடியவில்லை: சிம்பு பட நாயகியின் பதிவு!

நான் இந்த படத்தின் ஹீரோயின் என்பதை நம்பவே முடியவில்லை: சிம்பு பட நாயகியின் பதிவு!

சிம்பு நடித்த படம் ஒன்றில் நாயகியாக நடித்துள்ள நடிகை ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் சிம்புவின் படத்தில் நான் ஹீரோயின் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை என பதிவு செய்துள்ளார்.

நடிகர் சிம்புவின் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’வெந்து தணிந்தது காடு’. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, மும்பை போன்ற பகுதிகளில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில் இந்த படத்தின் டப்பிங் பணிகளை முடித்ததாக சிம்பு தெரிவித்திருந்த நிலையில் அடுத்த கட்டமாக தற்போது நாயகி சித்தி இட்னானி தனது பகுதியின் டப்பிங் பணியை முடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியபோது ’வெந்து தணிந்தது காடு’ படத்தின் டப்பிங் பணியை முடித்து விட்டேன் என்றும் என்னுடைய சொந்த குரலில் டப்பிங் செய்ய கௌதம் மேனன் அனுமதித்ததற்கு தனது நன்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சிம்பு மற்றும் கவுதம் மேனன் படங்களில் நடிக்க வேண்டும் என்பது தனது கனவு என்றும் அந்த கனவு ஒரே படத்தில் நிறைவேறி விட்டதாகவும் இப்பொழுது கூட என்னால், நான் தான் கௌதம் மேனன் படத்தில் நாயகி என்பதை என்னால் நம்ப முடியவில்லை என்றும் அவர் பதிவு செய்துள்ளார். மேலும் கௌதம் மேனனுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் அவர் செய்துள்ள நிலையில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஏஆர் ரகுமான் இசையில் உருவாகிய இந்த படம் செப்டம்பர் 15ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிம்பு, சித்தி இதானி, ராதிகா, சித்திக், நீரஜ் மகாதேவன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தின் வசனத்தை எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார் என்பது தெரிந்ததே.

LATEST News

Trending News

HOT GALLERIES