இந்த வயதில் நடிக்க வந்தது ஏன்? நிருபரின் கேள்விக்கு அண்ணாச்சியின் 'நச்' பதில்!
சரவணா ஸ்டோர் அண்ணாச்சி சரவணன் அவர்கள் நடித்த 'தி லெஜண்ட்’ திரைப்படம் வரும் 28ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் - இந்தியா திரைப்படமாக வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் பிரஸ்மீட்டின் போது நிருபர்கள் கேட்ட சில கேள்விகளுக்கு அண்ணாச்சி சரவணன் ‘நச்’ என உடனே பதில் கூறியது அனைவரையும் அசத்தியது.
அண்ணாச்சி தமிழிலேயே தான் பேசினார். ஒரு சில நிருபர்கள்.. "கன்னடம் அல்லது இங்கிலீஷ்ல பேசுங்க!!" என்றார்கள். ஆனால், அண்ணாச்சி தொடர்ச்சியாக நிதானமாக தமிழிலிலேயே உரையாடினார். அண்ணாச்சியிடம் பல கேள்விகள் கேட்டாலும் சில கேள்விகளுக்கு அவரது பதில் நச்சென இருந்தது..
"இந்த வயதில் ஏன் நடிக்க வந்தீர்கள்? லேட்டாக வந்திருக்கிறோமே என வருத்தமாக இல்லையா?" என ஒருவர் கேக்க... அதற்கு அமிதாப் இன்னும் நடித்துக்கொண்டு இருக்கிறார். ரஜினி, கமல், சரத் எல்லோருக்கும் என்னைவிட பலமடங்கு வயது கூடியவர்கள். அவர்கள் எல்லோரும் இன்னும் நடித்துக்கொண்டுத்தானே இருக்கிறார்கள். அவர்களிடம் இந்த கேள்விகளை நீங்கள் கேட்பீர்களா? என்றதும் எல்லோரும் மெளனம் காத்தார்கள்..
"இல்ல, சீக்கிரம் வந்திருக்கலாமே?!!" என்கிறோம் என ஒரு நிருபர் சமாளிக்க...எனக்கு சின்ன வயதிலிருந்து சினிமா ஒரு பெருங்கனவு.. ஆனால் அதை அடைய சினிமாவுக்கு வெளியே வியாபாரத்தில் பெரியதாய் உழைக்க வேண்டியிருந்தது. வியாபாரத்தில் ஒரு இடத்தை பிடித்தப்பின்பே எனக்கான கனவை நோக்கி நான் வந்தேன். அதற்கான நேரம் இப்போது தான் கிடைத்தது.. மேலும் சினிமா என்பது கலை தான் என்றாலும் அது ஒரு பெரும் வணிகம். அந்த வணிகத்தில் கூட என்னை சரியாக நிலைநிறுத்திக்கொள்ள பெரும் திட்டமிடலும், கமர்ஷியலான கதையும் தேவையாக இருந்தது. அது இப்போது தான் சரிவர அமைந்தது" என பதில் சொன்னார்.
நான் இயக்குனர் ஜெர்ரியை தனியாக அழைத்து கேட்டேன். "சார், கிஷோர் பியாணிக்கே இன்ஸ்ப்ரேஷன் சரவணாஸ் ஸ்டோர் அண்ணாச்சிதான் என கேள்விப்பட்டிருக்கிறேன்."ஜீரோ டூ ஹீரோ" என அவர் வியாபாரம் விஸ்தரித்த கதையை சுவாரஸ்யாமாக படம் செய்திருக்கலாமே? என்றேன்.
அவர் சொந்த கதையை சினிமாவாக்க நாங்களும் தான் ஐடியா சொன்னோம்.. ஆனால் அவருக்கு அதில் விருப்பமில்லை. மேலும் விஜய், ரஜினி படங்கள் போல ஒரு கலர் ஃபுல்லான அதே சமயம் ரொம்ப ஸ்டஃப் இருக்குற மாதிரியான ஒரு கமர்ஷியல் படம் பண்ணனும் என்பது தான் அவரின் ஆசையாக இருந்தது..
எனவே அதை நோக்கி வேலை செய்ய ஆரம்பித்தோம். எல்லா ஏரியாவிலும் பெஸ்ட் எதுவோ அது எல்லாமே உள்ள கொண்டுவந்துட்டோம். படம் ரொம்ப நல்லாவும் வந்திருக்கு.. அதனால தான் எல்லா மொழிகளிலும் ஒன்றாக வெளியிடுகிறோம் என்றார்.