ஒரு ரூபா கூட செலவில்லாம படம் பாக்க போறேன் மச்சி: 'தமிழ் ராக்கர்ஸ்' டீசர்

ஒரு ரூபா கூட செலவில்லாம படம் பாக்க போறேன் மச்சி: 'தமிழ் ராக்கர்ஸ்' டீசர்

ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில், அருண் விஜய் நடிப்பில், அறிவழகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ’தமிழ் ராக்கர்ஸ்’ வெப்தொடரின் டீசர் சற்று முன் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

தமிழ் திரையுலகிற்கு பெரும் சவாலாக இருந்தது ’தமிழ் ராக்கர்ஸ்’ என்பதும் புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியான ஒரு சில மணி நேரத்தில் இந்த தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகி தமிழ் திரையுலகிற்கு கடும் சவாலை கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது

தமிழ் ராக்கர்ஸ் உரிமையாளர் யார்? அது எங்கிருந்து செயல்படுகிறது என காவல்துறை, சைபர் கிரைம் உள்ளிட்ட பல துறைகள் விசாரித்தும் இன்னும் கண்டுபிடிக்கப்படாத நிலைமைதான் உள்ளது

இந்த நிலையில் தமிழ் ராக்கர்ஸ் எங்கிருந்து செயல்படுகிறது? அதனை கண்டுபிடிப்பது எப்படி என்பது குறித்த கதையம்சம் கொண்டது தான் இந்த ’தமிழ் ராக்கர்ஸ்’ வெப்தொடர். ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் மற்றும் வாணி போஜன் நடிப்பில் உருவாகியுள்ள இந்த வெப்தொடர் சோனிலைவ் ஓடிடியில் விரைவில் வெளியாக உள்ளது. சற்றுமுன் வெளியான டீசர் இந்த தொடரின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

LATEST News

Trending News

HOT GALLERIES