ஆர்ஜே பாலாஜியை அடுத்து புளுசட்டை மாறனுக்கு பதிலடி கொடுத்த 'மாமனிதன்' இயக்குனர்!

ஆர்ஜே பாலாஜியை அடுத்து புளுசட்டை மாறனுக்கு பதிலடி கொடுத்த 'மாமனிதன்' இயக்குனர்!

சமீபத்தில் ஆர்ஜே பாலாஜி நடித்த ’வீட்ல விசேஷம்’ படத்தை கடுமையாக விமர்சனம் செய்த புளுசட்டை மாறனுக்கு ஆர்ஜே பாலாஜி பதிலடி கொடுத்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் ஆர்ஜே பாலாஜியை அடுத்து தற்போது ’மாமனிதன்’ இயக்குனர் சீனு ராமசாமியும் புளுசட்டை மாறனுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அஜித், விஜய் படங்கள் உள்பட கிட்டத்தட்ட அனைத்து படங்களையும் கடுமையான விமர்சனம் செய்து வருபவர் புளுசட்டை மாறன் என்று திரையுலகினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒரு படத்தில் உள்ள நிறைகுறைகளை விமர்சனம் செய்யாமல், தனிமனித தாக்குதலில் ஈடுபடுவதாகவும் அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது. குறிப்பாக அஜித்தை குறிவைத்து அவர் கடந்த சில நாட்களாக டுவிட்டரில் பதிவு செய்து வருவதை அடுத்து அஜீத் ரசிகர்கள் அவர் மீது ஆத்திரத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘மாமனிதன்’ திரைப்படத்தை கடுமையாக விமர்சனம் செய்ததோடு நாயகியின் தந்தை நகை வாங்கி வரும் காட்சியில் லாஜிக் இல்லை என்று தனது விமர்சன வீடியோவில் கூறியுள்ளார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள ‘மாமனிதன்’ இயக்குனர் சீனு ராமசாமி அவர்கள் கூறியிருப்பதாவது:

இனிய மாறா
வணக்கம்

உங்கள்
விமர்சனத்திற்கு எனதன்பு

நகை ஆர்டர் குடுக்க மகளோடு போயிருக்கார்
வாங்க தனியா போகலாம் இல்லையா?

மனிதனை கொல்லலாம்
மாமனிதனை
உங்களால் கொல்ல முடியாது
@tamiltalkies

நன்றி... என பதிவு செய்துள்ளார்.

ஏற்கனவே புளுசட்டை மாறன் ’வீட்ல விசேஷம் படத்தை கடுமையாம விமர்சனம் செய்ததற்கு, ’எங்கள் படம் யாருக்குப் போய்ச் சேர வேண்டுமோ அவர்களுக்கு போய் சேர்ந்து விட்டது என்றும் எந்த புளுசட்டைகளுக்கும் போய் சேர வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஆர்ஜே பாலாஜி பதிலடி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

HOT GALLERIES