கமல்ஹாசன் தான் என் ஹீரோ, என் நண்பன்: சொன்ன பிரபல நடிகை யார் தெரியுமா?
’கமல்ஹாசன் தான் என்னுடைய ஹீரோ, என்னுடைய நண்பர்’ என்று பிரபல நடிகை ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளதை அடுத்து அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
கமலஹாசன் நடித்த ’விக்ரம்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த வெற்றிக்காக கமல்ஹாசன் உள்பட படக்குழுவினர்களுக்கு ஒட்டுமொத்த திரையுலகினர் பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பதும் தெரிந்ததே.
பல திரையுலக பிரபலங்கள் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன. அந்த வகையில் கமல்ஹாசனுடன் ‘சிங்காரவேலன்’, ‘மைக்கேல் மதனகாமராஜன்’ உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்த நடிகை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
உங்கள் மீது நம்பிக்கை கொள்ளுங்கள், உங்களுடைய உள்ளுணர்வை நம்புங்கள், உங்களுடைய திறமையை நம்புங்கள், உலக நியதிகளை மீறி தன் திறமையை நம்பி தனது வேலைகளை செய்பவர் கண்டிப்பாக வெற்றி பெறுவார், நிமிர்ந்து நடப்பார் என கமலஹாசன் குறித்து கூறி அதன்பின், ‘அவர் என் ஹீரோ என் நண்பன்’ என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.