அஜித் போட்ட ஒரே ஒரு நிபந்தனை: விக்னேஷ் சிவன் அதிர்ச்சி!
அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருக்கும் நிலையில் அஜித் போட்ட ஒரே ஒரு நிபந்தனையால் விக்னேஷ் சிவன் தரப்பு அதிர்ச்சி அடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.
அஜித் நடிப்பில், லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருக்கும் ’அஜித் 62’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் ஆர்கானிக் விவசாயி வேடத்தில் அஜீத் நடித்து வருவதாகவும், தமிழகம் முழுவதும் நல்ல சத்துள்ள உணவை மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்ட தொழிலதிபராக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இந்த படத்தில் சில கார்ப்பரேட் முதலாளிகள் அவருக்கு இடைஞ்சல் தருவதால் கார்ப்பரேட் முதலாளிகள் குறித்த ஆவேசமான சில வசனங்கள் உள்ளதாகவும், அந்த வசனங்களை மறைமுகமாக அரசியல் கருத்தைக் கொண்டதாக இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் விக்னேஷ் சிவனை அழைத்த அஜித், இந்த படத்தில் எந்த சர்ச்சைக்குரிய வசனங்களும், அரசியல் வசனங்களும் இருக்கக் கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளாராம். இந்த ஒரே ஒரு நிபந்தனையாக அதிர்ச்சி அடைந்து இருக்கும் விக்னேஷ் சிவன் தரப்பு, திரைக்கதையில் மாற்றம் செய்யலாமா? அல்லது அதே திரைக்கதையில் வசனத்தை மட்டும் அஜித் கூறியபடி மாற்றலாமா? என்ற ஆலோசனையில் இருப்பதாக கூறப்படுகிறது.