பிரபல காமெடி நடிகர் மருத்துவமனையில் அனுமதி: இதயகோளாறு என தகவல்!

பிரபல காமெடி நடிகர் மருத்துவமனையில் அனுமதி: இதயகோளாறு என தகவல்!

பிரபல காமெடி நடிகர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு இதய கோளாறு என்று கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர் போண்டா மணி. இவர் ஒரு இலங்கை தமிழர். கடந்த பல ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் இருந்து அகதியாக ராமேஸ்வரம் வந்து அதன்பின் நடிகர் ஆனார். சுமார் 175 திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார் என்பதும் பெரும்பாலும் வடிவேலு படங்களில் போண்டாமணி காமெடி கேரக்டரில் நடித்துள்ளார் என்பதும் றிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இதய கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து அவர் விரைவில் குணமாக வேண்டும் என திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் தங்களது சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LATEST News

Trending News