இந்திய சினிமாவின் புது அவதாரம்: 'ராக்கெட்டரி' படத்தின் முதல் விமர்சனம் தந்த பிரபலம்!

இந்திய சினிமாவின் புது அவதாரம்: 'ராக்கெட்டரி' படத்தின் முதல் விமர்சனம் தந்த பிரபலம்!

நடிகர் மாதவன் நடித்து, தயாரித்து, இயக்கிய ‘ராக்கெட்டரி’ திரைப்படம் வரும் ஜூலை 1ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இந்த படத்தை பார்த்த பிரபலம் ஒருவர் தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார் .

75 வது கேன்ஸ் திரைப்பட விழா தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த விழாவில் மாதவன் நடித்து இயக்கிய ‘ராக்கெட்டரி’ திரைப்படம் திரையிடப்பட்டது. தற்போது கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டிருக்கும் இசைப்புயல் ஏஆர் ரகுமான் அவர்கள் இந்த படத்தை பார்த்து, தனது சமூக வலைதளப் பக்கத்தில் மாதவன் அவர்களுக்கு எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் இந்திய சினிமாவின் புது அவதாரத்தை எடுத்துள்ளார் என்றும் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது .

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இந்த படத்தில் மாதவன், சிம்ரன் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படம் இந்திய சினிமாவில் ஒரு புதிய மைல்கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES