சூர்யாவுக்கு முன்பே 'வாடிவாசலை' ரிலீஸ் செய்யும் லெஜண்ட் சரவணன்!
சூர்யா நடிக்கவிருக்கும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கயிருக்கும் நிலையில் லெஜண்ட் சரவணன் வாடிவாசலை ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்
பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் நடிப்பில், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’தி லெஜண்ட்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது. மேலும் இந்த படத்தின் புதிய போஸ்டர் கேன்ஸ் திரைப்பட விழாவில் வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற முதல் சிங்கிள் பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்ற நிலையில் இரண்டாவது சிங்கிள் பாடல் வரும் 20ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ள ’வாடிவாசல்’ என்று தொடங்கும் இந்த பாடலுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
லெஜண்ட் சரவணன் ஜோடியாக பிரபல பாலிவுட் நாயகி ஊர்வசி ரெளட்டாலா நடித்துள்ள இந்த படம் ஜே.டி-ஜெர்ரி இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவாகியுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம், என பான் -இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ளது. வேல்ராஜ் ஒளிப்பதிவில் ரூபன் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்திற்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது என்பது தெரிந்ததே.