கணவரை பிரிந்து மனவேதனையில் இருக்கின்றேன்: பிரபல சீரியல் நடிகை!
பிரபல தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகை ஒருவர் தனது கணவரை பிரிந்து மனவேதனையில் இருப்பதாக பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகை ரக்சிதா ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற தொடரின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு ’சரவணன் மீனாட்சி’ தொடரில் கவின் ஜோடியாக நடித்தார். இந்நிலையில் தன்னுடன் இணைந்து நடித்த தினேஷ் என்பவரை காதலித்து கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டரஞ்சிதா கடந்த ஒரு ஆண்டாக கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க இருதரப்பு குடும்பத்துப் பெரியவர்கள் முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ரக்சிதா தற்போது ‘சொல்ல மறந்த கதை’ என்ற தொடரில் நடித்து வருகிறர். இந்த தொடரில் கணவனை இழந்து, இரு குழந்தைகளை வளர்க்க போராடும் கேரக்டரில் நடித்து வருவதாக பேட்டி ஒன்றில் ரக்சிதா கூறியுள்ளார். மேலும் இந்த கேரக்டர் தனது சொந்த வாழ்க்கையோடு சில சமயங்களில் ஒத்துப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளதை அடுத்து கணவரை பிரிந்துள்ளதை அவர் மறைமுகமாக கூறியுள்ளதாக தெரிகிறது. மேலும் தனிமை தனக்கு மன வேதனையை தந்தாலும் இந்த கேரக்டரில் இருப்பது போல் தனிமையை சந்திக்கும் துணிவும் தைரியமும் தனக்கும் இருப்பதாக ரக்சிதா கூறியுள்ளார்.